ஆஸி., சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இந்திய செஃப்

Sakshita Khosla  |  Updated: July 12, 2018 19:58 IST

Reddit
Chef Saransh Goila To Appear On Masterchef Australia As A Guest-Judge
இந்தியாவின் ஸ்டார் செஃப் ஷரன்ஷ் கொய்லா, மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் 10வது ஆண்டு நிறைவை சிறப்பிக்க ஷரன்ஷுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல செஃப்ஃபான ஷரன்ஷ், ‘கொய்லா பட்டர் சிக்கன்’ என்ற உணவகத்தின் நிறுவனரும் கூட. அவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் ஒளிபரப்பப்பட உள்ளது.
 
 

A post shared by Saransh Goila (@saranshgoila) on

தயாரிப்பு குழு வெளியிட்டுள்ள வீடியோவில் நிகழ்ச்சியில் நடக்கும் சிலவற்றை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான, எலிமினேஷன் சுற்றில், கொய்லா தனது ஃபேமஸ் பட்டர் சிக்கனை, அதே சுவை மற்றும் தன்மையோடு செய்து காட்டுமாறு போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
 

 

A post shared by Saransh Goila (@saranshgoila) on

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பேசிய கொய்லா “ இதில் பங்கேற்றது எனக்கும் கொஞ்சம் பிரஷராக தான் இருந்தது. நான் இந்தியாவின் பிரதிநிதியாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். நான் சரியாக பேச வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தேன். நம்முடைய உணவு வகைகளை சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன்” என்று அவர் கூறினார்.

Listen to the latest songs, only on JioSaavn.com

ஷரன்ஷின், கொய்லா பட்டர் சிக்கனை தயாரிக்க அவருக்கு 6 மாதங்கள் ஆனதாக தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சியில் என்னுடைய கொய்லா பட்டர் சிக்கனை 4 முறை சுவைத்து சரி பார்த்த பின்னரே, போட்டியாளர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால் கொய்லா பட்டர் சிக்கன் வெறுமனே காய்கறி, உணவு பொருட்களின் கலவையால் ஆனது அல்ல. அது, பாரம்பரிய சமையல் யுக்திகளை சேர்த்து உருவாக்கப்பது “ என்றார்.

செஃப் கொய்லா 2017-ம் ஆண்டு, தனது பட்டர் சிக்கனை, பிரபல செஃப் கலோம்பரிஸிடம் கொடுத்து சுவைக்கச் சொல்லி இருக்கிறார். அவர் அதை சுவைத்த பின் கொய்லாவுக்கு “உலகின் சிறந்த பட்டர் சிக்கன் செஃப்” என்று புகழ்ந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கொய்லா உடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “ சிறந்த செஃப் அதைவிட சிறந்த மனிதர்” என்று புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.

கொய்லா பட்டர் சிக்கன் உணவகம் மட்டும் அன்றி, ஃபுட் ஃபுட் என்ற சேனலில் இரண்டு நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார். ‘இந்தியா ஆன் மை பிளேட்டர்’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதி இருக்கிறார்.

Comments About Sakshita KhoslaSakshita loves the finer things in life including food, books and coffee, and is motivated by self-indulgence and her love for words. When not writing, she can be found huddled in the corner of a cosy cafe with a good book, caffeine and her own thoughts for company.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement