ஒரு கிலோ பிரியாணி, மேஜிக் பஃபே - இந்த ரம்லான் எந்த ஹோட்டல் என்ன ஸ்பெஷல்

இந்த ரமலான் ஸ்பெஷலுக்கு பார்பிக்யூ நேஷன் ஹோட்டலோட அனைத்து கிளைகளிலும் “மேஜிக் ரமதான்” என்ற புதிய பஃபே மெனுவை சேர்த்திருக்கிறார்கள்

NDTV Food  |  Updated: June 15, 2018 17:35 IST

Reddit
chennai ramzan briyani special
Highlights
  • ரமலான் என்றாலே நமக்கு இரண்டு விஷயங்கள் ஞயாபகம் வரும்
  • சுவைத்திராத ரமலான் விழாவின் ஸ்பெஷல் டிஷ்கள கிடைக்கிறது
  • ரமலானுக்கு அசைவம் தான் சாப்பிடனுமா என்ன?
ரமலான் என்றாலே நமக்கு இரண்டு விஷயங்கள் ஞயாபகம் வரும். ஒன்று ஈகை மற்றொன்று பிரியாணி. “பாய் வீட்டு பிரியாணி தான்டா நல்லா இருக்கும்” என முஸ்லிம் நண்பகளிடம் ஐஸ் வைக்காத பிரியாணி பிரியரே இருக்க முடியாது. பிரியாணி மட்டும் அல்ல இந்த ரமாலுனுக்கு நம் சென்னை மாநகரத்துல நீங்க ஆசை தீர சாப்பிட்டு மகிழ பல ஹோட்டல்கள், பல வெரைட்டி ரமலான் ஸ்பெஷல் உணவுகள மெனுவுல சேர்த்திருக்காங்க. உங்க குடும்பத்தோடைவோ, நண்பர்களோடவோ இல்ல ஓவியா ஆர்மி போல பிரியாணி ஆர்மின்னு ஒன்ன உருவாக்கிட்டு உங்களுக்கு பிடிச்ச ஹோட்டலுக்கு போய் வகை வகையா பிரிச்சு மேயலாம்.

எந்த ஹோட்டல்? என்ன ஸ்பெஷல்?

Listen to the latest songs, only on JioSaavn.com

பார்பிக்யூ நேஷன்: (தி.நகர், வேளச்சேரி, வடபழனி, ஓ.எம்.ஆர், கே.என்கே)
 
barbeque

இந்த ரமலான் ஸ்பெஷலுக்கு பார்பிக்யூ நேஷன் ஹோட்டலோட அனைத்து கிளைகளிலும் “மேஜிக் ரமதான்” என்ற புதிய பஃபே மெனுவை சேர்த்திருக்கிறார்கள் . அந்த மெனுவில் குர்டா கீமா கலீஜா, கோஷ் ஷம்மி கபாப், சிக்கன் ஷிக்கம்புரி கபாப், சிக்கன் கிம்மா பாவ் என நாம் இதுவரை கேட்டிராத, சுவைத்திராத ரமலான் விழாவின் ஸ்பெஷல் டிஷ்கள கிடைக்கிறது. மறக்காம முன் கூட்டியே புக் பண்ணுவது அவசியம். டின்னருக்கு மட்டும் தான் இந்த சிறப்பு விருந்து. ஜூன் 17 வரைக்கு இந்த விருந்து இருக்கு

சைட்டூன்:
 
zaitoon

உயிர் வாழ காத்து வேணாம், பிரியாணி மட்டும் போதும்னு சொல்றவங்களுக்காகவே சைட்டூன் செம காம்போ ரெடி பண்ணிருக்காங்க. 1 கிலோ, சிக்கன், மட்டன், மலபார் மட்டன் தம் பிரியாணி வாங்குனா (இதுல ஏதாவது ஒன்னுதான் பாஸ்) காம்போவாக, ஃபுல் பிபிகியூ சிக்கன், 1லிட்டர் பெப்சி, ஸ்வீட், மாயோ சாஸ், ரைத்தா, கத்திரிக்கா கிரேவின்னு அசத்துறாங்க. குறிப்பு: இது ஹோம் டெலிவரி அல்லது டேக் அவே மட்டுமே. லிமிட்டெட் ஆஃபர், சீக்கிரம் ஆர்டர் பண்றவங்களுக்கு தான் முன்னுரிமை. ஒரு நாள் முன்னாடி ஆர்டர் பண்ணறவங்களுக்கு 5% ஆஃபர் இருக்காம், முந்திக்கோங்க.

Commentsவில்லேஜ் ரீட்ரீட்:
 
ramzan

ரமலானுக்கு அசைவம் தான் சாப்பிடனுமா என்ன? சைவத்துலையும் டிஷ் செஞ்சு அசத்துவோம் என்கிறது வில்லேஜ் ரீட்ரீட் ரிசார்ட் நிர்வாகம். 2 வகை சூப், 2 வகை சாலட், 2 வகை ஸ்டார்ட்ர்ஸ், 10க்கும் மேற்பட்ட மெயின் டிஷ் அதில் 5 சைவை பிரியாணி வகைகள். மொகல் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ஐதிராபாத் பிரியாணி மலபார் பிரியாணி, கச்சி பிரியாணி இப்படி எல்லா அசைவ வகை பிரியாணி சுவையை சைவத்துல கொண்டு வராங்க. மஹாபலிபுரம் பக்கத்துல குன்னத்தூர்ல இந்த ரிசார்ட் இருக்கு. முன் கூட்டியே புக் பண்ணிட்டு விருந்துக்கு போகலாம்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement