மண் பாத்திரத்தில் செய்யப்படும் “ஆசிய உணவுகள்”… ஒரு கை பார்க்க ரெடியா..? #FoodReview

ரெண்டு மெயின் டிஷ் இந்த ‘க்ளே பாட் ஃபெஸ்டிவல்’-நிகழ்வுல இருக்கு

  |  Updated: July 03, 2019 14:19 IST

Reddit
Clay Pot Festival in Asia Kitchen- Food Review

Buddha’s Delight in a Casserole, Sansei Chicken, Glass Noodles in Tao’s Sauce அப்டி இப்டின்னு பல உணவு வகைகளை மண் பாத்திரத்தில வச்சு சமைச்சு கொடுக்கிறாங்க

நம்ம ஊர்ல மண் பானையில வைக்கிற மீன் குழம்புக்கு இணையான ஒரு உணவே கிடையாது. ஏன்… மண் பாத்திரத்தில செய்யுற எல்லா சாப்பாட்டுக்கும் தனி சுவை இருக்கும். சுமாரா சமைக்கிறவுங்க கூட, மண் பாத்திரத்த வச்சி சமைச்சா, சுவை கூடிடும். இப்பலாம் கிராமத்தில கூட இந்த மண் பானை உணவு சமைக்கிற முறை குறைஞ்சிடுச்சு. ஆனா நீங்க சென்னையில இருக்கீங்கன்னா, ‘Asia Kitchen'-ல மண் பானையில செய்த ஆசிய வகை உணவுகள ஒரு கை பார்க்கலாம். சீன உணவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்ற Mainland China-வுடைய துணை உணவகம்தான் இந்த ஆசிய கிச்சன். 

சரி நம்ப சாப்பாட்டுக்கு வருவோம்… Buddha's Delight in a Casserole, Sansei Chicken, Glass Noodles in Tao's Sauce அப்டி இப்டின்னு பல உணவு வகைகளை மண் பாத்திரத்தில வச்சு சமைச்சு கொடுக்கிறாங்க. ஆனால் ரெண்டு விஷயம் நாக்குல இருந்து விலகவே விலகாது. அதுல ஒண்ணு கிங் இறால். இன்னொன்னு இந்தியன் சால்மன் மீனு. ரெண்டுமே பல விதத்தில பரிமாறப்படுது. ஆனா, ஸ்டார்ட்டர் போல போன உடனே டீப்-ஃப்ரை பண்ணி கொடுக்கிறாங்க. எண்ணைச் சொட்ட சொட்ட அதை அப்படியே எடுத்து வாய்க்கு உள்ள போட்டா… அப்டி இருக்கும். 

Newsbeep
qipln6ag

ஆசிய உணவுகள்னா, எப்படி நூடுல்ஸ் இல்லாம இருக்கும். ரெண்டு மெயின் டிஷ் இந்த ‘க்ளே பாட் ஃபெஸ்டிவல்'-நிகழ்வுல இருக்கு. ஒண்ணு இஞ்சி நூடுல்ஸ். இன்னொன்னு சிக்கன் க்ளே பானை சோறு. ரெண்டயும் தனியாவே சாப்பிட முடியும்னாலும் பல வகை க்ரேவி, சைட் டிஷ்-ஆ கொடுக்கிறாங்க. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு கட்டு கட்டலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com

இதுல ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கு. சீனாவில இருந்து இறக்குமதி செய்யபட்ற ஒரு வகை மண் பாத்திரங்கல்ளதான் உணவுகள் சமைக்கப்படுது. அதை பரிமாறவும் பிரத்யேக மண் பாத்திரங்கள் வச்சிருக்காங்க. உணவகத்துக்குள்ள போனவுடன் ஒரு தட்டு வைக்கப்படுது. அந்தத் தட்ட தெரியாம தொட்டுப் பார்த்தா, அப்படி ஒரு சூடு. ஏன்னு கேட்டா, உணவுகள் ஆறிடாம இருக்க தட்டுகளை பிரத்யேகமாக சூடு பண்ணித்தான் டேபிளுக்குக் கொண்டு வருவாங்களாம். இப்படி, அடி முதல் நுனி வரை எல்லா விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்றாங்க. ஆசிய வகை உணவு உங்களுக்குப் பிடிக்கும்னா, உடனடியா இந்த ‘க்ளே பாட் ஃபெஸ்டிவலுக்கு' போய் ட்ரை பண்ணுங்க. பாரம்பரிய முறையில உணவுகள ருசிக்க ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு வேளை உங்களுக்கு ஆசிய உணவு பற்றி பெரிய அறிமுகம் இல்லைனா, இந்த வாய்ப்பப் பயன்படுத்திக்கோங்க.

8hpfk1cg

-பரத்ராஜ் ர
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement