உடலை க்ளென்ஸ் செய்ய ஆஸ்பராகஸ் சாப்பிடலாம்!

   |  Updated: January 05, 2019 17:59 IST

Reddit
Cleanse Your Body With This Radiance-Boosting Dinner

நாம் சாப்பிடும் உணவை பொருத்து தான் நம் சரும ஆரோக்கியம் அமையும். நாம் சாப்பிடக்கூடிய உணவில் சருமத்திற்கு தேவையான ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. பச்சை காய்கறிகளை எவ்வளவு சேர்த்து கொள்கிறோமோ சருமம் அவ்வளவு ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும். மேலும் சருமத்தை பிரகாசிக்க செய்யும். கீரைகள், ஆஸ்பராகஸ், பூண்டு, ஸ்நோ பீஸ் ஆகியவற்றை ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

ஆஸ்பராகஸில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். இது உடலில் ப்ரீபையோட்டிக்காக செயல்பட்டு செரிமானத்தை தூண்டும். மேலும் இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. வைல்டு கார்லிக்கில் சல்ஃபர் இருப்பதால் சருமம் மாசுமருவின்றி இருக்கும்.

ஸ்நோ பீஸில் வைட்டமின் சி மற்றும் ஏ இருக்கிறது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உங்களுக்கு இளமை தோற்றத்தை அள்ளித்தரும். உணவில் நிச்சயம் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். கீரையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. ஆலிவ் எண்ணெய் உணவில் நறுமணம் மற்றும் ருசியை அதிகரிக்க செய்யும். இதில் பாலிஃபினால் நிறைந்திருப்பதால் முதுமை அவ்வளவு எளிதில் உங்களை நெருங்காது. செல்களை புதுபிக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இரவு உணவாக இதனை சாப்பிட்டு வர உடலுக்கு ஆரோக்கியமும் சருமத்திற்கு பளபளப்பும் கிடைக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement