புரதச்சத்து நிறைந்த க்ளூட்டன் ப்ரீ கோக்கனட் மாவு

   |  Updated: September 10, 2018 14:41 IST

Reddit
Coconut Flour: The Gluten-Free Protein Rich Flour That Can Be Made At Home

சத்துக்கள் நிறைந்த உணவில் உன்னதமான உணவு தேங்காய்.  தேங்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.  பொதுவாக, தேங்காய், தேங்காய் எண்ணெய், இளநீர், தேங்காய் பால், தேங்காய் மாவு என எல்லாமே சத்து நிறைந்தது.  இதில் புதிதாக இருப்பது தேங்காய் மாவு.  இந்த தேங்காய் மாவில் க்ளுட்டன் இல்லாத மற்றும் கீடோஸ் இருக்கக்கூடிய உணவிது.  கீடோஸ் என்பது கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து இல்லாமல் கொழுப்பிலேயே உடலை இயக்குவது.  வழக்கமாக பயன்படுத்தும் அரிசி, கோதுமை, போன்றவற்றை தவிர்த்து இந்த தேங்காய் மாவை பயன்படுத்தலாம்.  சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும் என்றாலும் விலை அதிகமாக இருக்கும்.  நல்ல விஷயம் என்னவென்றால், இதனை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயார் செய்யலாம்.  

தேங்காய் மாவு என்றால் என்ன?

தேங்காயில் இருந்து தேங்காய் பால் தயாரிக்கும்போது கிடைக்கும் பை ப்ராடக்ட் தான் தேங்காய் மாவு.  பொதுவாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயில் அதிகபடியான கொழுப்பு இருக்கிறது.  ஆனால் இந்த தேங்காய் மாவில் கொழுப்பு சத்து குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தும் காணப்படுகிறது.  இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் நம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.  மேலும் இதில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவில் இதுவும் ஒன்று.  இந்த தேங்காய்மாவு துளியும் கொரகொரப்பாக இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும்.  தரமான தேங்காய் மாவை தயாரிக்க குறைவான சூட்டில் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அதில் இருக்க கூடிய கடைசி சொட்டு பாலும் நீங்கி மணல் போல் ஆகிவிடுகிறது.  பின் அதனை அரைத்தால் தேங்காய் மாவு ரெடி.  இந்த தேங்காய் மாவை இதுவரை கடைகளில் வாங்கியது போதும்.  இனி வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.  
 

krq9gpo8

வீட்டிலேயே தேங்காய் மாவு செய்வது எப்படி?

1. தேங்காய மாவு செய்ய ஒரு முழு தேங்காய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும்.  முதலில் தேங்காயை சுத்தியல் அல்லது ஹேண்ட் ட்ரில் கொண்டு சிறிதாக துளையிட்டு தண்ணீரை வெளியேற்றி விடுங்கள்.
2. அடுத்து, கொப்பரையில் இருந்து தேங்காயை கத்தி கொண்டு வெளியே எடுத்து, மேல் தோலை சீவி கொள்ளுங்கள். 
 மேல் தோலை நீக்கிய பின், தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு கப் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதிவேகத்தில் வைத்து அரைக்கவும்..
3. தேங்காயும், தண்ணீரும் சேர்ந்து நன்கு அரைபட்டு மாவு பதத்திற்கு வரும்வரை அரைக்கவும்.
4. பெரிய பாத்திரத்தில் வெள்ளை துணி விரித்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை கொட்டி தேங்காய் பாலை பிரித்தெடுத்து கொள்ளுங்கள். 
5. ஒரு பேக்கிங் ட்ரேவில் பட்டர் ஷீட் வைத்து அதன் மேல் இந்த அரைத்த தேங்காயை கொட்டி பரப்பி விடவும்.
6. மைக்ரோவேவ் அவனை 77 டிகிரி செல்ஷியசில் ப்ரீஹீட் செய்து இந்த பேக்கிங் ட்ரேவை வைத்து 45 நிமிடங்கள் வைக்கவும்.
7. 45 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து பார்த்தோமானால் அரைத்த தேங்காய் நன்கு உலர்ந்து இருக்கும்.  இதனை மீண்டும் ஃபுட் ப்ராசசரில் போட்டு அதிவேகத்தில் ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் அரைத்தால் தேங்காய் மாவு தயார்.  
8. இந்த பவுடரை ப்ரட், ப்ரௌனீஸ் மற்றும் கேக் தயாரிப்பில் பயன்படுத்தி கொள்ளலாம்.  இதில் க்ளுட்டன் இல்லை என்பதால் நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் தவிர்த்து இதனைபயன்படுத்தலாம். 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Related Recipe

Advertisement
Advertisement