உடல் எடையை குறைக்க, தேங்காய் எண்ணெயில் சமைப்பதே சிறந்தது

தேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: June 27, 2018 15:29 IST

Reddit
Coconut Oil May Be The Best Cooking Oil For Weight Loss, As Per Experts
உடல் எடையை குறைப்பது என்பது வேகமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்லை என்பதால், முழுமையான ஈடுபாடும், பொறுமையும், அதிகப்படியான அர்ப்பணிப்பும் அதற்கு தேவை. உணவின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கலோரிகளையும் கருத்தில் கொண்டு, சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளல் வேண்டும். உடல் எடையை குறைப்பது எனும் ஒற்றை இலக்கை அடைவதற்காக எல்லா வழிமுறைகளையும் நீங்கள் முயற்சிப்பவர் என்றால், சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் கூட அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான உணவு என கருதப்படும் தேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும். வயிற்று கொழுப்பையும், தொப்பையையும் குறைக்க தேங்காய் எண்ணெய்யே மிகச்சிறந்த வழி என சொல்கிறார்கள் உடல் ஆரோக்கிய நிபுணர்கள்; தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுகிறது?

கலோரிகளை எரிக்கிறது

உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற தேங்காய் எண்ணெய் பயன்படும். அதனால், உடல் ஆற்றலை அதிகம் பயன்படுத்தி கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கிறது.

பசியின்மையை குறைக்கிறது

தேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்கள், உடலை முழுமையாக வைத்திருக்கும். அதனால், குறைந்த அளவிலேயே உணவு எடுத்து கொள்ள தூண்டும். அதனால், உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.

வயிற்று கொழுப்பை குறைக்க உதவும்

உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டவர்களின் உடல் எடை குறைந்துள்ளது எனவும், சோயாபீன் எண்ணெய் பயன்படுத்தியவர்களின் வயிற்று கொழுப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

Listen to the latest songs, only on JioSaavn.com

அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது

தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிக அளவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த கூடாது. சமையலின் சில உணவுகளுக்கு மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

Commentsஎனினும், உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்னர், மருத்துவரின் பரிந்துரையை கேட்பது நல்லது.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement