தேங்காய் வினிகரின் பலன்கள்! - வீட்டிலேயே செய்ய ஈஸி வழிமுறைகள்!

தேங்காய் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 28, 2019 17:48 IST

Reddit
Coconut Vinegar: Benefits, Uses And Step-By-Step Guide To Make It At Home
Highlights
  • தேங்காய் பால் அல்லது தண்ணீரில் வினிகர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
  • கோவன் சமையல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • இதனை வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம்.

தேங்காயின் பலன்கள் என்னவென்று நாம் அனைவருமே அறிவோம். தேங்காயில் இருந்து பெறப்படும் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் நிறைந்து இருப்பதால் தெற்காசியா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேங்காயைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.  இப்பொழுது தேங்காயிலிருந்து கிடைக்கும் வினிகர் பற்றி நாம் அறிவோமா?

1tb2gj8g 

கோவன் சமையலுக்கு தேங்காயிலிருந்து எடுக்கப்படும் வினிகர் பயன்படுகிறது. இதனால் நல்ல ஃப்ளேவர் கிடைப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர். இதிலிருந்து கோகோநட் ஃபென்னித் தயாரிக்கவும் இந்த வினிகர் பயன்படுகிறது. மற்ற வினிகரைப் போல இல்லாமல் சுவையில் சிறு மாற்றம் இருக்கும். ஆனால், உடலுக்கு ஹெல்தியானது. வினிகரைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதானே!!

 

1. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகிறது

தேங்காய் வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது. குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது அதனுடன் தேங்காய் வினிகர் சேர்த்தால் நல்ல பலனைத் தரும்.2. உடல் எடை குறைப்பு

உங்கள் டயட்டில் தேங்காய் வினிகரைச் சேர்த்தால் எதிர்பார்த்த பலன் விரைவில் கிடைக்கலாம். அடிக்கடி பசிக்கும் உணர்வைத் தடுத்து உடல் எடை குறைக்க உதவும்.3. செரிமானப் பிரச்னை

தேங்காய் வினிகரில் நொதித்தல் தன்மை அதிகம் இருப்பதால் உணவை சீக்கிரம் செரிமானம் செய்து, நல்ல உணர்வைத் தருகிறது, இதற்கு இன்னொரு காரணம் அசிட்டிக் அமிலமும் கூட.4. ரத்த அழுத்தம்

தேங்காய் வினிகரில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தேங்காய் வினிகரை எப்படி செய்வது?

வினிகரை நொதித்த தேங்காய் தண்ணியில் இருந்து அல்லது தேங்காய் பாலில் இருந்து எடுக்கலாம்.  ஈஸியாக எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்....1. தேங்காய் தண்ணீரை ஒரு பேனில் எடுத்துக் கொள்ளவும்.2. அந்த தண்ணீரை சூடுபடுத்தி அதில் சர்க்கரையைக் கலக்க வேண்டும். பிறகு சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும்.3. பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, ஆறவைக்கவும். முழுவதும் குளிர்ந்த பின் ஒரு கண்ணாடி கன்டெய்னரில் போட்டு மூடி வெளிச்சம் படாத இடத்தில் ஒரு வாரம் வரை வைக்கவும்.4. முதலில் இது ஆல்கஹாலாக மாறும். சிறதளவு வினிகரை (கடையில் வாங்கியது) இதனுடன் சேர்க்கவும். ஊற்றிய வினிகரிலிருந்து செல்கள் பாக்டீரியாக்கள் அசிடிக் அமிலத்துடன் வினைபுரியும்.5. வினிகர் சேர்த்த இந்தக் கலவையை 4-12 வாரம் வரை வைக்கவும். இந்த காலகட்டத்தில் கலவை வினிகராக மாறியிருக்கும்.இந்த தேங்காய் வினிகரை நாம் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். வினிகரால் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பின் பயன்படுத்தவும். அதிக அளவு ஆசிட் இருப்பதால், குறைவாகப் பயன்படுத்தவும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement