நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் மிளகாய்!!!

மிளகாய் உணவுக்கு தேவையான ருசியை மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: April 08, 2019 12:22 IST

Reddit
Compound Found In Chillies May Help Slow Lung Cancer Progression: Study

மிளகாயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதா இல்லையா என்பது தான் ஆரோக்கியம் குறித்து நடந்து வரும் விவாதமாக இருக்கிறது.  மிளகாய் உணவுக்கு தேவையான ருசியை மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியிருக்கிறது.  சமீபத்தில் வெளியான ஆய்வு தகவலின்படி, மிளகாயில் காரத்தை உண்டாக்கும் பொருள், நுரையீரலில் புற்றுநோய் பரவாமல் தடுக்கிறதாம்.  ஆண் மற்றும் பெண் இருவருக்குமே உடனடி மரணத்தை ஏற்படுத்தக்கூடியது நுரையீரல் புற்றுநோய். 

மெட்டாஸ்டாசிஸ் என்னும் செயல்முறையின்படி உடலில் புற்றுநோய் பரவும் அபாயம் அதிகம்.  மிளகாயில் காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய பொருள் உடலில் புற்றுநோய் வெகுவாக பரவுவதை தடுக்கும்.  இந்த மெட்டாஸ்டாசிஸ் செயல்முறையின் விளைவாக நுரையீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வேகமாக எலும்பு, மூளை, கல்லீரல் மற்றும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் நுரையீரலில் புற்றுநோய் பரவாமல் தடுக்க உதவுகிறது.  நுரையீரலில் இருக்கக்கூடிய புற்றுநோய் செல்களை எடுத்து சோதனைக்கு உட்படுத்தினர்.  இந்த சோதனை எலியில் நடத்தப்பட்டது.  அதில் கேப்சைசின் கொடுக்கப்பட்ட எலியின் நுரையீரலை காட்டிலும் கொடுக்கப்படாத எலியின் நுரையீரலில் புற்றுநோய் தாக்கம் அதிகம் இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

வருங்காலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரபியுடன் சேர்த்து இந்த கேப்சைசின் கொடுக்கப்படும் என்று மருத்துவத்துறை ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது.  இனி உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.  ஆரோக்கியத்தோடு வாழ்ந்திடுங்கள்.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  ChilliCancer

Advertisement
Advertisement