இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து உணவுகள்!!

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: May 27, 2019 13:28 IST

Reddit
Consuming Dietary Fibres May Stave Off Risk Of Heart Transplants

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் இருதய ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது.  மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.  நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் இருதய நோயாளிக்கு இருதய ஆரோக்கியமும் சீராக இருக்கிறது.  அதேபோல குடல் பகுதியில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது.  இதனால் இருதய நோய் அபாயம் குறைகிறது.  சில நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் கார்போஹைட்ரேட் சத்தும் இருக்கிறது.  இது உடலில் சுரக்கும் என்சைம்களால் செரிக்கப்படுகிறது.  தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பட்டாணி, விதைகள், கொட்டைகள், பருப்புகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். நம் குடல் பகுதியில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய குடற்புழுக்கள் இருக்கும்.  சிலரது உடலில் இருக்கக்கூடிய குடற்புழுக்கள் இருதயத்தை பலவினமாக்குகிறது.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், உடலிலுள்ள நுண்ணிய உயிர்கள் ஆகிய இரண்டுமே இருதய ஆரோக்கியத்தை தீர்மானிக்க கூடியதாய் இருக்கும்.  இருதய நோயாளிகள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாக இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். 

Listen to the latest songs, only on JioSaavn.comநாட்பட்ட இருதய் நோயாளிகள் 84 பேர் மற்றும் ஆரோக்கியமான 266 பேரை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  அதில் குறைந்த அளவு நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இருதய செயலிழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது.  அதுகுறித்து மேலும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.  ஆகவே, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  FibreHeart

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement