மாரடைப்பை தடுக்க வாரத்தில் இரண்டு முறை இதை சாப்பிடுங்கள்!!

தினசரி அல்லது வாரத்தில் பல முறை நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இருதய நோய்கள் தடுக்கப்பட்டு, நோய்களின் அபாயம் 17 சதவிகிதம் குறைக்கப்படுகிறதென்று தகவல் வெளியானது. 

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: September 03, 2019 18:25 IST

Reddit
Consumption Of Nuts Twice A Week May Reduce Risk Of Heart Attack: Study

ஆரோக்கியமான உடல் மற்றும் மனதிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.  பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமல்லாது, விதைகள் மற்றும் கொட்டைகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தொடர்ச்சியாக நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.  தினசரி அல்லது வாரத்தில் பல முறை நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இருதய நோய்கள் தடுக்கப்பட்டு, நோய்களின் அபாயம் 17 சதவிகிதம் குறைக்கப்படுகிறதென்று தகவல் வெளியானது. 

நட்ஸில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து இருப்பதுடன், புரதம், தாதுக்கள், வைட்டமின், நார்ச்சத்து, ஃபைடோஸ்டெரால், பாலிஃபினால் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.   இந்த சத்துக்கள் அனைத்துமே இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியதாய் இருக்கிறது.  நடத்தப்பட்ட ஆய்வில் 35 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் மொத்தம் 5432 பேர் கலந்து கொண்டனர்.  இவர்கள் அனைவருக்குமே இருதய நோய்களின் அபாயம் இல்லாதிருந்தது.  தொடர்ச்சியாக 12 வருடங்கள் பரிசோதனையில் இருந்த இவர்களின் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.  பின் 751 பேர் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.  

தொடர்ச்சியாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை சாப்பிட்டு வந்தவர்களின் இருதயம் ஆரோக்கியமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.  அதனால் வாரத்தில் இரண்டு முறை அல்லது தினசரி நட்ஸ் சாப்பிட்டு வரலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement