நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செம்பு தண்ணீர்

சர்க்கரை நோயை நிர்வகிக்கும் திறன் இந்த செம்பு தண்ணீருக்கு உண்டு என்று பண்டைக்கால ஆயுர்வேத குறிப்புகள் தெரிவிக்கின்றன

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 12, 2018 13:51 IST

Reddit
Copper Water May Be An Effective Way To Manage Diabetes Naturally

உலகெங்கும் பொதுவான உடல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பது நீரிழிவு நோய் தான். இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியால் அதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் நாம் உண்ணும் உணவு நம் உடலின் இரத்த சர்க்கரை அளவில் பிரதிபலிக்கும். உடலில் இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க நார்ச்சத்து மிகுதியான மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை. சர்க்கரை நோயை நிர்வகிக்கும் திறன் இந்த செம்பு தண்ணீருக்கு உண்டு என்று பண்டைக்கால ஆயுர்வேத குறிப்புகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செம்பு எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

செம்பு தண்ணீர் குடிக்கும்போது, உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட என்ஸைம்களின் வேலைகள் சீராகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் இந்த செம்பு தண்ணீருக்கு பெரும் பங்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நம் உடலால் தானே செம்பை உற்பத்தி செய்து கொள்ள முடியாது என்பதால் செம்பு பாத்திரத்தில் சமைத்தோ, அதில் நீர் அருந்தியோ உடலின் செம்பு தேவையை பூர்த்தி செய்யலாம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு வீக்கம், தோல் பிரச்சனைகள் மற்றும் காயங்கள் மிகவும் தாமதமாக குணமாவது போன்ற தொல்லைகள் இருக்கும். செம்பு தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் காயம் மற்றும் வீக்கத்தை சரிசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

drp9lq8o
  •  ஊட்டச்சத்துக்களை அப்படியே உள்வாங்க வைக்கும் திறன் இதற்கு உண்டு.
  • டாக்டர் வசந்த் லேட் எழுதிய “The Complete Book of Ayurvedic Home Remedies” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, செப்பு தண்ணீரை குடிப்பதால், உடலில் கபம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து, ஜீரண சக்தியை தூண்டி, உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

இரவு தூங்கும்முன் ஒரு டம்ளர் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலில் சர்க்கரை அளவையும் குறைய செய்யும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com