பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழங்களை அப்படியே உண்ணலாம், அல்லது கேக், புட்டிங், இனிப்பு வகைகள், உள்ளிட்ட உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்

एनडीटीवी  |  Updated: June 11, 2018 20:23 IST

Reddit
Dates
பெரும்பாலான பாலைவனப் பகுதிகளில்லேயே, பேரிச்சம்பழங்கள் வளர்க்கப்படும். புதிதாக அல்லது காய்ந்த வகையில் பயன்படுத்தலாம். மத்திய கிழக்கு நாடுகளில், அதிகம் பயன்படுத்தும் உணவு வகையாக பேரிச்சம்பழம் உள்ளது. இனிப்பாகவும் ருசியாகவும் இருக்க கூடியது. பழத்தின் மேல் பகுதி சுருக்கங்களோடு உருளை வடிவத்தில் இருக்க கூடியது.

பயன்பாடு

பேரிச்சம்பழங்களை அப்படியே உண்ணலாம், அல்லது கேக், புட்டிங், இனிப்பு வகைகள், உள்ளிட்ட உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.  சில நாடுகளில், வினீகர் அல்லது மது அல்லாத பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 

பழங்கள் தவிர. பேரிச்சம்பழம் மரத்தின் பல்வேறு பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தின் சாறு சிரப்புகள் செய்வதற்கும், பழத்தில் உள்ள விதைகள் சோப்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகின்றன.ஊட்டச்சத்து
  • நார்ச்சத்துகள் நிறைந்த பேரிச்சம்பழங்கள், உடலிலுள்ள கொழுப்புகள் குறைய உதவும். இதனால், சீரான செரிமானம் இருக்கவும் வழிவகுக்கும்.  உணவுக்கட்டுப்பாடு நார்ச்சத்துகள் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும்.
  • உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
  • பேரிச்சம்பழம் குறைந்த கலோரிகள் கொண்டதாக இருக்கின்றன.
  • இரும்புச்சத்து அதிகம் உள்ள பேரிச்சம்பழம், இரத்த அணுக்களின் அளவை பெருக்க உதவும். இரத்த சோகையால் பாதிப்படைந்தவர்கள், பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளலாம்

உங்களுக்கு தெரியுமா?

நீண்ட ஆயுளையும் வளர்ச்சியையும் குறிப்பிடும் வகையில் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் தேசிய சின்னமாக பேரிச்சம்பழம் உள்ளது.  உலகம் முழுவதும், ஆண்டுக்கு நான்கு மில்லியன் டன் பேரிச்சம்பழங்கள் வளர்க்கபடுகின்றன.

Comments 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com