உடல் சூட்டை தணிக்கும் ஹெல்தி சாலட்!!

கலோரிகள் குறைந்தும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் இந்த சாலட் உடல் எடை குறைக்க உதவும். 

एनडीटीवी  |  Updated: July 02, 2019 11:26 IST

Reddit
Summer Essential: Defeat The Heat With A Bowlful Of Healthy Salad
Highlights
  • இந்த சாலட்கள் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
  • துளசி, புதினா சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.
  • இந்த சாலட்டில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.

இந்த கோடைக் காலத்தில் மசாலா மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  இவை உடலை மேலும் வெப்பமடைய செய்யும்.  இந்த கோடையை சமாளிக்க நிறைய நீராகாரங்களை எடுத்து கொள்வது சிறந்தது.  அவை உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்துணர்ச்சியளிக்கும் சாலட்களை சாப்பிடலாம்.  இவை ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.  உடலுக்கு புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் கோடை வெப்பத்தை எளிதில் சமாளிக்கவும் முடியும்.  

முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், கீரைகள், பன்னீர் அல்லது டோஃபு, முட்டையின் வெள்ளை பகுதி, மீன், நட்ஸ், ஆளி விதை அல்லது சியா விதை, சிக்கன், யோகர்ட், சீஸ் ஆகியவை சேர்த்து ஆரோக்கியமான சாலட் செய்து சாப்பிடலாம். இத்துடன் நீங்கள் விரும்பினால் எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு, துளசி ஆகியவை சேர்த்தும் செய்து சாப்பிடலாம். அடிக்கடி இந்த சாலட்டை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.   இந்த சாலட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். 

v4ljrbhk

* இந்த சாலட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை தூண்டி, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 

* ஆண்டிஆக்ஸிடண்ட், ஃபோலிக் அமிலம், லைக்கோபீன், ஃபைட்டோகெமிக்கல் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.  

* கலோரிகள் குறைந்தும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் இந்த சாலட் உடல் எடை குறைக்க உதவும். 

* ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் அடங்கி இருப்பதால் நாட்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்கும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

* ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.  

* உங்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு ருசியான சாலட்டை செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.  கோடை வெப்பத்திற்கு குட் பை சொல்லுங்கள்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement