வைட்டமின் பி12 பற்றாக்குறை உங்களை மனநோயாளியாக்கும்!!!

வைட்டமின் பி நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து கொள்வது மனநோய்களில் இருந்து நம்மை காக்கும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 19, 2019 12:26 IST

Reddit
Deficiency In B Vitamins Linked To Mental Illnesses In Adolescents: Preliminary Study

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது.  வைட்டமின் பி12 உடலில் இரத்த சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்வதோடு இரத்தசோகை வராமல் பார்த்துக்கொள்கிறது.  உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்பட்டால் இரத்த சிவப்பனுக்களின் உற்பத்தி குறைந்துவிடும்.  உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் இந்த வைட்டமின்களின் பற்றாக்குறை நாம் நினைத்து பார்க்காத பிரச்னைகளை உண்டாக்கவல்லது.  அதாவது, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வைட்டமின் பி12 மற்றும் பி9 பற்றாக்குறையினால் இளம்வயதினருக்கு மனநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. 

2015 முதல் 2017 வரை உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆவணத்தை எடுத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உடலில் வைட்டமின் பி12 மற்றும் பி9 குறைபாடு காரணமாகவே இக்குழந்தைகள் மனநோய்க்கு ஆளானது தெரியவந்துள்ளது.  மனநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 780 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  அதில் 40 சதவிகிதத்தினர் வைட்டமின் பி9 குறைபாட்டாலும், 20 சதவிகிதத்தினர் வைட்டமின் பி12 குறைபாட்டாலும், 10 சதவிகிதத்தினர் இவ்விரண்டு வைட்டமின் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறிவித்துள்ளனர்.  மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் பி குறைபாடு அதிகமாகவே இருந்தது. 

மேலும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு வைட்டமின் பி9 பற்றாக்கு அதிகமாகவே இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.  அதேபோன்று, குழந்தைகளோடு ஒப்பிடும்போது இளம்வயதினருக்கும் வைட்டமின் பி9 மற்றும் பி12 குறைபாடு இருமடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.  வைட்டமின் பி நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து கொள்வது மனநோய்களில் இருந்து நம்மை காக்கும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement