மெயின் ஸ்ட்ரீட்டில் டில்லி ட்ரீட்ஸ்!

NDTV Food  |  Updated: August 13, 2018 23:09 IST

Reddit
delhi street food fest At the residency towers

மழைக்காலம் தொடங்கிவிட்ட நேரத்தில், கார சாரமான உணவுகளை சாப்பிட தோன்றும். சென்னை தி ரெசிடன்சி டவர்ஸ் மெயின் ஸ்ட்ரீட் உணவகத்தில் டில்லி ஸ்ட்ரீட் ஃபுட் விழா நடைப்பெற்று வருகிறது.

10 நாட்கள் நடைப்பெறும் இந்த உணவுத் திருவிழாவில், டில்லி பகுதிகளில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரீட் ஃபுட் சுவைகளை கொண்ட சாலட், பக்கோடா, கச்சோரி, ஆலூ சாட், பரோட்டா, கட்லட், ரோல்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ur59kec8

வித்தியசமான மெனுவுடன், சுவையான டில்லி சாட் வகைகள் இந்த விழாவில் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக, ஜல்மெளரி சாட், சோலா பட்டூரி ஆகியவை டில்லியின் பாரம்பரிய சுவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. டில்லி ஸ்டைல் உணவுகளுக்கே உரித்தான எள் எண்ணையில் தயாரிக்கப்பட்ட மட்டன் கீமா பரோட்டா, முர்க் பஸந்த் ஆகிய உணவுகள் இன்னொரு ரவுண்டு கேட்க தூண்டுகிறது.

b01umu2g

லண்டன் மெயின் ஸ்ட்ரீட் செட்-அப்பில் இருக்கும் தி டவர்ஸ் உணவகத்தில், டில்லி ஸ்ட்ரீட் ஃபுட் அமைத்திருப்பது, வித்தியாசமான அனுபவத்ததை அளிக்கிறது. மெயின் கோர்ஸ் உணவுகளில், ஆவாதி பிரியானி கண்டிப்பாக சுவைக்க வேண்டும். இறுதியாக, டில்லி ஜிலேபி, குஸ் குஸ் ஷர்பத், ஷிர்கந்த் பாயாசத்துடன் உணவுத் திருவிழாவின் மெனு முடிவடைகிறது.

ஆகஸ்டு 10 முதல் 19 ஆம் தேதி வரை இந்த உணவுத் திருவிழா நடைப்பெறுகிறது.

மதியம்: மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை
இரவு: மாலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை
இடம்: மெயின் ஸ்ட்ரீட், தி ரெசிடன்சி டவர்ஸ், தி-நகர், சென்னை
மேலும் விவரங்களுக்கு - 9710643573 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement