காலை உணவை ஆரோக்கியமானதாக்குங்கள்!!

குடும்பத்துடன் சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காலை உணவுகளை உண்டு மகிழுங்கள். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 22, 2019 08:59 IST

Reddit
Delicious And Nutritious Sunday Breakfast Recipes 
Highlights
  • வார இறுதி நாட்களில் தான் உங்கள் காலை உணவை ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.
  • உங்கள் நாவின் சுவை அரும்புகள் மலரும் வகையில் ருசியாக இருக்கும்.
  • இந்த ரெசிபியை செய்து குடும்பத்துடன் சாப்பிடுங்கள்.

வேலை நாட்களில் நாம் காலை உணவை சாப்பிடுவதில் சில நடைமுறை பிரச்னைகள் உள்ளன.  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அலுவலகத்திற்கு கிளம்புவது என பரபரப்பான வாழ்க்கை சூழலில் காலை உணவை ஆரோக்கியமானதாக செய்திட முடியாது.  அதனால் வார இறுதி நாட்களில் காலை உணவை முடிந்தவரை சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருத்தல் சிறப்பு.  குடும்பத்துடன் சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காலை உணவுகளை உண்டு மகிழுங்கள். கோபி பராத்தா:

காலிஃப்ளவர், கோதுமை, வெண்ணெய், பச்சை மிளகாய் மற்றும் இனிப்பு சேர்த்து செய்யப்படும் இந்த கோபி பராத்தாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பிடிக்கும் இந்த உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது.  காலை நேரத்தில் சுட சுட சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ஃபிங்கர் சாண்ட்விச்:

வார இறுதி நாட்களில் உங்கள் குடும்பத்துடன் பிக்னிக் அல்லது அவுட்டிங் செல்ல நேர்ந்தால், இந்த சாண்ட்விச் செய்து எடுத்து செல்லலாம்.  ஓரங்கள் வெட்டப்பட்ட ப்ரட், முட்டைகோஸ், வெள்ளரி, அன்னாசி, இஞ்சி, புதினா, குடைமிளகாய், பச்சைமிளகாய், உப்பு, தக்காளி மற்றும் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாண்ட்விச் எடுத்து செல்வதற்கு எளிமையானது.  காலை நேர பசியை போக்கும். 

ப்ரட் ஊத்தாப்பம்:

ப்ரட், ரவை, மைதா, தயிர், சீரகம், குடைமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த வட இந்தியாவின் பிரத்யேகமான உணவாக இருக்கிறது.  இந்த ப்ரட் ஊத்தாப்பம், மிகவும் லைட்டானது.  இத்துடன் தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் இதன் ருசி அலாதியானதாக இருக்கும். 

வெஜ் ஹாஷ் ப்ரௌனி:

உருளைக்கிழங்கு, மஷ்ரூம், ஸுக்கினி, குடைமிளகாய், மிளகு, எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு, பச்சை மிளகாய் மற்றும் செடர் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.  காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சேர்க்கப்படுவதால் இதன் ருசி வித்தியாசமாக இருக்கும்.  இதனை காலை உணவாக உட்கொண்டால் நாள் முழுக்க எனர்ஜியுடன் இருக்கலாம். 


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement