விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபி!!

வட மாநிலங்களில் இது இந்து பண்டிகைகள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 04, 2019 12:36 IST

Reddit
Ganesh Chaturthi Special: Delicious Maharashtrian Breakfast Dish Ghavan Recipe
Highlights
  • மகாராஷ்டிராவில் விநாயாகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • காலை உணவாக கவன் ரெசிபி தயாரிக்கப்படுகிறது.
  • கவன் என்பது கொங்கானி ரெசிபிகளுள் ஒன்று.

செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்படுகிறது.  இந்து மத கடவுளான யானை முகத்தானை கொண்டாடும் விதமாகவே விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த பண்டிகையின் போது ருசியான இனிப்பு வகைகளை செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விநாயகரை வழிப்பட்டு பின் வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து இனிப்புகளை உண்பதில் பெரு மகிழ்ச்சி அடைவார்கள்.   

வட மாநிலங்களில் இது இந்து பண்டிகைகள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.  மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான பூரன் போளியை செய்து சாப்பிடலாம்.  அதேபோல கவன் என்று சொல்லப்படும் அரிசி மாவில் செய்யக்கூடிய ரெசிபியுடன் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் ருசியான இனிப்பு வகையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.  அரிசி மாவு கொண்டு செய்யப்படும் நீர் தோசையுடன் கிரேவி அல்லது சட்னி கொண்டு சாப்பிடலாம்.  கவன் மாவு தயாரிக்கும் போது அதில் நிறைய பேர் சீரகத்தை சேர்த்து கொள்வார்கள்.  அரிசி, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவை சேர்த்து சில நிமிடங்களில் இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம்.  இந்த சுவையான ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

1. அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  

2. நன்கு ஊறிய பின் அதனை அரைத்து அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக இல்லாமல் கரைத்து கொள்ளவும்.  

3. அடுப்பில் நாண்ஸ்டிக் தவா வைத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.  

4. அதனை சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.  

5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து கிரேவி அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

 

 

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement