Dengue Prevention: டெங்குவை தடுக்க சில Diet Tips... Experts கூறுவதை கேளுங்கள்! (Watch)

Dengue Prevention: எளிய வீட்டு வைத்தியம் மற்றும் உணவு குறிப்புகள் மூலம் டெங்கு நோய்த்தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும் என மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுவதை அறிந்துகொள்ளுங்கள்.

NDTV Food  |  Updated: October 23, 2019 10:49 IST

Reddit
Dengue Prevention: Fight Dengue With These Expert-Recommended Diet Tips (Watch)

Dengue Prevention: டெங்குவை எதிர்த்துப் போராட பின்பற்ற வேண்டிய டயட் டிப்ஸ்..

Highlights
  • ஒவ்வொரு ஆண்டும், இந்திய நகரங்களில் இருந்து பல டெங்கு நோய்கள் பதிவாகின்றன
  • டெங்கு நோய் தொற்றை தடுக்க உதவும் நிபுணர்களின் சில உணவு குறிப்புகள் இங்கே
  • பப்பாளி இலை முதல் ஆட்டு பால் வரை சில உணவுகள் டெங்குவைத் தடுக்க உதவும்

Dengue Prevention: நோய்த் தொற்றுகளிலிருந்து மீள்வதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் இந்த காலக்கட்டம், டெங்கு காய்ச்சல் (Dengue Fever) என்பது ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் தொற்று ஆகும். இது பெண் கொசுக்கள் (Aedes aegypti) கடிப்பதால் பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய நகரங்களில் இருந்து பல டெங்கு நோய்கள் பதிவாகின்றன. டெங்கு தொற்று, குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரயும் பாதிக்கிறது. நீங்கள் டெங்குவால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அதிலிருந்து மீள சில உணவுகள் உங்களுக்கு உதவும். இதற்கு 3 பாரம்பரிய வைத்தியங்கள் உள்ளது. அதில் முதலாவது, பப்பாளி இலைச் சாறு குடிப்பது (3-5 இலைகள் பிழிந்தவை). ‘அமிர்தவள்ளி' இலைச் சாற்றை அருந்துவது (வேரு பெயர் ‘சீந்தல்'). இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். மூன்றாவது, அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற ஆட்டுப் பால்.

இரத்தத்தின் பரும அளவை (blood volume) பராமரிக்க, பல்வேறு சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறைய திரவங்களை குடிக்க பரிந்துரைக்கின்றனர். பிளேட்லெட்டுகளின் (platelets) குறைவால் இரத்தத்தின் பரும அளவு பாதிக்கப்படுகிறது. பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பச்சைக் காய்கறிகள், கீரைகள், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள் (nuts), மற்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால் புரதங்கள் அதிகளவு கிடைக்கும். மிகவும் முக்கியமான இரும்புச்சத்து, இந்த உணவுகளில் தேவையான அளவு கிடைக்கும். இரும்புச்சத்தை உறிந்துக் கொள்ள உதவியாக அதனுடன் வைட்டமின் சி கொண்ட உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா, மேலும், சில சிறந்த உணவு ஆதாரங்களையும் பரிந்துரைக்கிறார். (வீடியோவை பார்க்கவும்)



Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement