நீரிழிவு நோயை தடுக்கும் இயற்கை உணவுகள்

நீரிழிவு நோயாளிகள் உணவில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 21, 2018 10:25 IST

Reddit
Diabetes Management: 3 Ayurvedic Superfoods That May Help Manage Diabetes Naturally

நீரிழிவு நோயாளிகள் உணவில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். இனிப்பு நிறைந்த உணவுகள், ஏரேட்டட் ட்ரிங்க்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்வதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும். நார்ச்சத்து நிறைந்த மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளே நீரிழிவு நோய்க்கு ஏற்றது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில இயற்கை உணவுகளை பார்ப்போம்.

பெரிய நெல்லி
பெரிய நெல்லியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையையும் குறைக்கும் தன்மை பெரிய நெல்லிக்கு உண்டு. இதில் வைட்டமின் சி இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். மேலும் இதில் இருக்கும் க்ரோமியம் மற்றும் தாதுக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. பெரிய நெல்லியை அப்படியே சாப்பிட்டு வரலாம். காலை நேரத்தில் நெல்லி சாறு குடித்து வந்தால் மிகவும் நல்லது.
 

f6u1g6ao


 

மஞ்சள்
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது. உடல் பருமன் மற்றும் சிறுநீரக குறைபாடு ஆகியவற்றை சரி செய்யும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம்.
 

ick5qbsg

 

Listen to the latest songs, only on JioSaavn.com

வெந்தயம்
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக உறிஞ்சப்படும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற போட்டு, தினமும் காலை இந்த நீரை குடித்து வரலாம். இவை உடலில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.
 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement