நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 3 பானங்கள்!

2030இல் 98 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது உறுதி என்று அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன

एनडीटीवी फूड डेस्क  |  Updated: January 05, 2019 18:05 IST

Reddit
Diabetes Management: 3 Low-Calorie Beverages To Manage Diabetes 

நீரிழிவு நோய் என்பது பலருக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. 2030இல் 98 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது உறுதி என்று அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. மாத்திரை மருந்துகளால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். ஆனால் அந்த மருந்துகளில் வீரியம் மற்ற உறுப்புகளை பாதித்துவிடும் என்பதால் இயற்கை வழியில் எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் குளிர்பானங்கள், சோடா, கோலா, மது போன்றவை இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

வெந்தய நீர்

வெந்தயத்தில் ஆண்டி-டையாபடிக் தன்மை இருக்கிறது. தினமும் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் ஊறவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் டைப்-2 நீரிழிவு நோய் குணமாகும். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் என்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
 

e043ls2

பட்டை நீர்

ஒரு தேக்கரண்டி பட்டை தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து நாள் ஒன்றிற்கு ஒருமுறை குடித்து வரலாம். பட்டையில் ஆண்டி- டையாபடிக் தன்மை இருப்பதால் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். தொடர்ச்சியாக இந்த நீரை குடித்து வந்தால் உடலில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நாள் ஒன்றிற்கு 3-6 கிராம் பட்டை தூளே உட்கொள்ள வேண்டும். அதிகபடியாக எடுத்து கொண்டால் வாயு தொந்தரவு ஏற்படும்.

ktj8nkj

 

பாகற்காய் சாறு

பாகற்காய் சாறு கசப்பு மிகுந்ததாக இருப்பதால் அதனை குடிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த கசப்பு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஆண்டி-டையாபடிக் தன்மை மற்றும் செராண்டின் என்னும் பொருள் இருப்பதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் p இன்சுலின் இருப்பதால் இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்கிறது.

4e1p850o

Diabetes Management: Karela also has an insulin-like compound called p-insulin

Sip on these healthful beverages and manage diabetes naturally. 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement