ப்ளான்க்மஞ்சே வித் ஸ்டிராபெர்ரி, ரெய்சின்ஸ், பிட்டர் ஆரஞ்ச் க்ரீம்

சுகர் ப்ரீ டெசர்ட் வகைகளை வீட்டிலேயே தயாரிக்க. இந்த புதிய வகை டெசர்ட்டை ட்ரை செய்து பார்க்கவும்

NDTV Food  |  Updated: August 13, 2018 20:00 IST

Reddit
diabetic-friendly recipe from Taj

சுகர் ப்ரீ டெசர்ட் வகைகளை வீட்டிலேயே தயாரிக்க. இந்த புதிய வகை டெசர்ட்டை ட்ரை செய்து பார்க்கவும்

ஆல்மண்டு பேஸ்ட் தயாரிக்க:
தேவையான பொருட்கள்


ஆல்மண்டு ப்ளேக்ஸ் - 75 கிராம்
பால் - 100 கிராம்
க்ரீம் - 100 கிராம்

செய்முறை

1. கடாயில், ஆல்மண்டு, பால், க்ரீக் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும்
2. பேஸ்ட் போன்ற கலவை வரும் வரை கலக்கவும். பின் குளிரூட்டவும்


பிஸ்கட் கப் தயாரிக்க:
தேவையான பொருட்கள்


 • மாவு - 100 கிராம்
 • கூடுதல் இனிப்பு - 2.5 கிராம்
 • தண்ணீர் - 25 கிராம்
 • ஆல்மண்டு பேஸ்ட் - 25 கிராம்
 • டெக்ஸ்டிரோஸ்
 • வெண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

1. டெக்ஸ்டிரோஸ் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
2. 0.5 செ.மீ தடிமன் அளவுள்ள பேபரில், மாவை உருட்டவும். பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, 7 செ.மீ அளவில் உருட்டப்பட்ட மாவை வைக்கவும்.
3. 160 டிகிரியில் 10 நிமிடங்களுக்கு அவனில் பேக் செய்யவும்.
4. பின்னர், பிஸ்கட் கப் தயார்

ஆல்மண்டு பன்னகோட்டா தயாரிக்க
தேவையான பொருட்கள்


 • க்ரீம்- 250 கிராம்
 • பால் - 125 கிராம்
 • கூடுதல் இனிப்பு - 5 கிராம்
 • ஆல்மண்டு பேஸ்ட்- 75 கிராம்
 • ஜெலடின் - 3.5 கிராம்

செய்முறை

1. குளிர்ந்த நீரில், ஜெலடின் ஷீட்களை நனைக்கவும். மென்மையானவுடன் தண்ணீரில் இருந்து எடுக்கவும்
2. கடாயில், க்ரீம், பால், கூடுதல் இனிப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், ஆல்மண்டு பேஸ்ட் சேர்த்து கலக்கவும்

ரெய்சின்; ஆரஞ்சு க்ரீம் தயாரிக்க:

தேவையான பொருட்கள்

 • ஆரஞ்ச் ஜூஸ் - 50 கிராம்
 • ரெய்சின் - 50 கிராம்
 • க்ரீம் - 125 கிராம்

செய்முறை

1. ரெய்சின், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து குறைந்த சூட்டில் சமைக்கவும்
2. பேஸ்ட் போன்று தயாரிக்கவும்
3. க்ரீம் சேர்த்து கலக்கவும்

ஸ்டிராபெர்ரி சாஸ் தயாரிக்க
ஸ்டிராபெர்ரி - 100 கிராம்
கூடுதல் இனிப்பு - 3 கிராம்

செய்முறை

1. ஸ்டிராபெர்ரி பழங்களை ஜூஸ் செய்யவும்
2. கூடுதல் இனிப்பு சேர்த்து, சாஸ் போல தயாரிக்கவும்

டெசர்ட் செய்முறை

 • ஸ்டிராபெர்ரி - 25 கிராம்
 • புதினா இலை -10 கிராம்

செய்முறை

ஸ்டிராபெர்ரிகளை நறுக்கி வைக்கவும். ஒரு தேக்கரண்டி ஆல்மண்டு பனக்கோட்டாவை கப்பில் எடுக்கவும். அதன் மேல், ரெய்சின் க்ரீம் வைக்கவும். இறுதியாக ஸ்டிராபெர்ரி சாஸ் ஊற்றவும். ஸ்டிராபெர்ரி, புதினா இலையுடன் பரிமாறவும்

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Recipe

Advertisement
Advertisement