சருமத்தை அழகாக்கும் கேரட்!!

கேரட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகள் எதுவாக இருந்தால் சரிசெய்துவிடும்.  சருமத்தில் அற்புதம் செய்யும் இந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 02, 2019 13:41 IST

Reddit
Did You Know? Carrots Can Give You A Beautiful Skin!
Highlights
  • கூந்தல், கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு கேரட் மிகவும் நல்லது.
  • கேரட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • அழகு பராமரிப்பிற்கு கேரட் சாறு பயன்படுத்தலாம்.

சருமத்தின் அழகையும் பொலிவையும் காத்திட தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் சருமம் தன் அழகை இழந்துவிடும்.  சருமத்தின் அழகை மெருகேற்றிட மார்க்கெட்களில் பல க்ரீம்கள், லோஷன்கள் போன்றவை விற்கப்படுகிறது.  ஆர்கானிக், ஹெர்பல் என்றாலும் கூட அதில் சிறிதளவாவது இரசாயணங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.  அதனால் இந்த பொருட்களையெல்லாம் வாங்கி பண விரையம் செய்யாமல் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு அழகை பராமரிக்கலாம் என்பதை கூறுவதுதான் இந்த கட்டுரை. ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் பாதுகாக்க கூடியது கேரட்.  கண், கூந்தல், தலைமுடி போன்றவற்றிற்கு சிறந்தது கேரட். கேரட் ஜூஸ் மற்றும் சாலட் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.  கேரட்டை கொண்டு உங்கள் மேனியை எப்படி அழகாக பராமரிப்பது என்பதை பார்ப்போம். 

nosteefo

 

ஃபேஸ் மாஸ்க்:

கேரட்டில் பொட்டாசியம் அதிகம் என்பதால் சருமத்தில் ஆழம் வரை சென்று வறட்சியை போக்குகிறது. ஒரு கேரட்டில் பாதியளவு துருவி எடுத்து கொள்ளவும்.  அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.  இது உங்கள் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்பட்டு, பிரகாசிக்க செய்யும். ஃபேஸ் பேக்:

கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால், சருமத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை குறைத்து, நச்சுக்களை அகற்றுகிறது.  ஒரு கப் கேரட் சாறு, ஒரு மேஜைக்கரண்டி தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.  பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் வரை வைத்திருந்து பின் தண்ணீரில் கழுவி விடவும். முகம் பிரகாசிக்க:

கேரட் ஜூஸ், யோகர்ட், முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும்.  கேரட் சாறு முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, பளிச் சருமத்தை கொடுக்கும். 

4q6teeg8

 

கருமையை நீக்க:

கேரட்டில் பீட்டா கெரட்டின் மற்றும் கெரோட்டினாய்டு இருப்பதால் UVA கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.  கேரட் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சம அளவு எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.  இதனை அவ்வப்போது முகம் மற்றும் உடலில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.  இதனால், சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு கருமை படராமல் இருக்கும். இளமை தோற்றத்தை பெற:

கேரட் சாறு, கற்றாலை இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும்.  இதனை முகத்தில் தடவி வந்தால் இளமை தோற்றத்தை பெறலாம்.  இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், கொலாஜனை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி சருமத்தை மென்மையாக்கும். கேரட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகள் எதுவாக இருந்தால் சரிசெய்துவிடும்.  சருமத்தில் அற்புதம் செய்யும் இந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement