மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..!

மன அழுத்த மேலாண்மை : ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது பயனுள்ள மன அழுத்த மேலாண்மை உத்திகளாக அறியப்படுகிறது. அதேபோல், இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளும் மன அழுத்தத்திக் குறைக்க உதவும்.

  | Translated by: Ragavan Paramasivam  |  Updated: December 04, 2019 11:33 IST

Reddit
Diet For Stress: Try These Vitamin-Rich Foods And Drinks To Get Rid Of Stress And Anxiety

மன அழுத்தத்திற்கான டயடில் கவா மற்றும் கிரீன் டீ போன்ற தேயிலைகளும், பச்சை காய்கறிகளும் அடங்கும்

Highlights
  • அஸ்வகந்தா உங்கள் மன அழுத்தத்தை மாற்றியமைக்க முடியும்
  • கவா பதட்டத்தை குறைக்க உதவும்
  • கீரைகளில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்

நாள்பட்ட மன அழுத்தம் (Chronic stress) உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும், பகல்-இரவு முழுவதும், தூங்க முடியாத் நிலையில் தொடர்ந்து அழுத்தமாக இருந்தால், நீங்கள் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள். நாள்பட்ட மன அழுத்தத்தால் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு, எடை இழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உடல் பருமன், மாதவிடாய் பிரச்சினைகள், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பாலியல் செயலிழப்பு, மோசமான செரிமான அமைப்பு மற்றும் பல ஆபத்துகள் ஏற்படலாம். இந்த கட்டுரையில், உங்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகள் மற்றும் வைட்டமின்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Newsbeep

மன அழுத்தத்திற்கான டயட், மன அழுத்தத்தை திறம்பட எதிர்த்துப் போராட உதவும்

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது ஆகியவை பயனுள்ள மன அழுத்த மேலாண்மை உத்திகள் என்று அறியப்படுகிறது. மேலும், மன அழுத்த சூழ்நிலைகள் குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்றுவதன் மூலமும், நீங்கள் சந்திக்கும் மன அழுத்தத்திற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். ஒவ்வொரு மன அழுத்த சூழ்நிலையிலும் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை என்று வாழ்க்கை முறை பயிற்சியாளர்  Luke Coutinho கூறுகிறார். உங்கள் வாழ்க்கையில் குறைந்த மன அழுத்தத்துடன் இருக்க புறக்கணிப்புக் கலையை (art of ignorance) கற்றுக்கொள்ளுங்கள்.

dc2lj9uoமன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா செய்யுங்கள்.
Photo Credit: iStock

Also read: 5 Simple Ways To Reduce Stress At Work

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் உணவுகள் இங்கே :

1. ஆரஞ்சு

வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளைப் பற்றிய ஆய்வுகளில், வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

2. பச்சை கீரைகள்

கீரைகளில் உள்ள பி-வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்க உதவும். உண்மையில், மெக்னீசியம் குறைபாட்டால் தலைவலி, சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் விளைவுகள் தூண்டப்படும். கீரைகளில் கார்ப்ஸ் குறைவாக உள்ளது, அவை எடை இழப்பு டயட்டில் சேர்க்கப்படலாம் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

Also read: High Blood Pressure And Other Top Benefits Of Including Leafy Greens In Diet

3. அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஒரு ஆயுர்வேத மூலிகையாகும், இது உங்கள் உடல் மற்றும் மன அழுத்தங்களுக்கு பின்னடைவைத் தரும். உங்கள் உணவில் அஸ்வகந்தாவை சேர்க்க ஒரு சுவாரஸ்யமான வழி உள்ளது. நெய்யில் ஒரு அவுன்ஸ் அஸ்வகந்த தூளை எடுத்து சிறிது பேரீட்ச்சை சர்க்கரை, தேன், வெல்லம் அல்லது தேங்காய் சர்க்கரை சேர்க்கவும் (இந்த இனிப்பு பொருட்களில் ஏதேனும் ஒன்று). இந்தக் கலவையை காலை உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு அல்லது பகலில் ஒரு கப் பாலுடன் சாப்பிடுங்கள். மன அழுத்தத்தால் தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால், இரவில் அஸ்வகந்தாவை உட்கொள்வது சிறந்தது. ஏனெனில், இது தூக்கத்தைத் தூண்ட உதவும். காலையில் கார்டிசோலின் அளவைக் குறைப்பதற்கும் அஸ்வகந்தா உதவும்.

4. கவா

கவா கவலையைக் குறைக்க உதவுவதால், பாரம்பரியமாக ஒரு சடங்கு பானமாக உட்கொள்ளப்படுகிறது. கவா அடிப்படையில் ஒரு வெப்பமண்டல பசுமையான புதர்ச்செடியாகும். இதன் வேர்கள் கவா தேநீர் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஒரு சில மக்கள் பாதாம் மற்றும் தேனை இந்த தேநீரில் சேர்க்கிறார்கள். இதை தவறாமல் குடிப்பதால் நீங்கள் தினசரி அனுபவிக்கும் மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கலாம். மேலும், கிரீன் டீ, பிளாக் டீ, கெமோமில் டீ ஆகியவை சரியான முறை மற்றும் பகுதிகளில் உட்கொள்ளும்போது மன அழுத்தத்தில் இதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும். தேயிலைகளில் பொதுவாக எல்-தியானைன் ( L-theanine) எனும் அமினோ அமிலம் காணப்படுகிறது. இது உடலில் அமைதியான விளைவுகளை ஏற்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் ஓய்வை ஊக்குவிக்கிறது.

j9aoc0koதேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை குறைக்கும்
Photo Credit: iStock

இந்த உணவுகள் மற்றும் இதிலிருக்கும் வைட்டமின்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இவை வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் யோகா மற்றும் தியானத்தை முயற்சி செய்யலாம். இருப்பினும், நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் அன்றாட செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கினால், நீங்கள் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: Turmeric Tea: Amazing Health Benefits You Cannot Afford To Miss

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  StressAnxiety

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement