தர்பூசணி சாப்பிட்டா இரத்த அழுத்தம் குறையுமா??

தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது.

   |  Updated: April 19, 2019 13:31 IST

Reddit
Hypertension Diet: Study Shows This Summer Fruit Can Help High BP Patients

இரத்த அழுத்தம் சீராக இருந்தால் மட்டுமே நமது அன்றாட உடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.  இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இருதய பிரச்னைகள் மற்றும் நரம்பு மண்டல பிரச்னைகளும் ஏற்படும்.  இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  குறிப்பாக இந்த வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிலருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.  அவர்களுக்காகவே இயற்கையின் வரப்பிரசாதம் தான் தர்பூசணி. 

Listen to the latest songs, only on JioSaavn.com

58 வயதில் இருக்கும் 14 பேரை வைத்து செய்யப்பட்ட சோதனையில், அவர்களுக்கு L-Citrulline மற்றும் L-Arginine வழங்கப்பட்டது.  இதன் விளைவாக, அவர்களுக்கு இருதய குறைபாடு மற்றும் மெட்டபாலிக் நோய்களின் ஆபாயம் குறைவாக காணப்பட்டது.  சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.  இந்த அமிலம் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை உற்பத்தி செய்வதால் இரத்த குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறது. 

Newsbeep

தர்பூசணி சாப்பிட்டவர்களை காட்டில் சாப்பிடாதவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே இருந்திருக்கிறது.  50 வயதில் இருப்பவர்கள் தர்பூசணி சாப்பிடுவதால் தமணிகளின் செயல்பாடுகள் சீராகி இரத்த அழுத்த பிரச்னை இல்லாமல் இருக்கிறது.  மேலும் தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  உடலிலும் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement