உடல் எடை குறைக்க சிக்கன் சூப் குடியுங்கள்!!

நாட்டுக் கோழியாக வாங்கி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  சிக்கன் மற்றும் ஓட்ஸ் ஆகியவை சேர்த்து புதுவகையான ரெசிபியை தயாரித்து சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 12:34 IST

Reddit
High-Protein Diet: This Oats and Chicken Porridge Is A Hearty Mix Of Health And Wholesomeness 
Highlights
  • நாட்டுக் கோழி சாப்பிடுவதால் சளி தொல்லை நீங்கும்.
  • உடல் எடை குறைக்க சிக்கன் சாப்பிடலாம்.
  • ஓட்ஸ் மற்றும் சிக்கனில் புரதம் இருப்பதால் உடல் எடை குறைக்க சாப்பிடலாம்.

காலை உணவு என்பது நாள் ஒன்றிற்கு மிகவும் முக்கியமான ஒன்று.  காலை உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவற்றை சேர்த்து கொண்டாலே போதும்.  ஆற்றலுடன் இருக்க முடியும்.  காலை உணவை தவிர்க்கும்போது உடல் தானாகவே சோர்வடைகிறது.  அதேபோல கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயமாக காலை உணவை தவிர்க்கக்கூடாது.  உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  ஓட்ஸ் மற்றும் சிக்கன் இரண்டுமே புரதம் நிறைந்தவை.  இதனை கொண்டு எப்படி உடல் எடை குறைப்பதென்பதை பார்ப்போம்.   

8lqpjq2g

 

Listen to the latest songs, only on JioSaavn.com

ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  நார்ச்சத்து செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இரத்தத்தில் சர்க்கரை தாமதமாகவே கலக்கும். செரிமான மண்டலம் சீராக இருக்கும்போது உடல் எடை குறைவதும் சீராக இருக்கும்.  ஓட்ஸில் மேலும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.  இதில் பொட்டாஷியம் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதனை ஸ்மூத்தி, மில்க் ஷேக், கூல், கேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.   

சிக்கனில் புரதம் அதிகமாக இருக்கிறது.  சிக்கனில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது.  உடல் எடை குறைக்க சிக்கனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  ஆனால் தரமான சிக்கனாக வாங்கி சமைத்து சாப்பிடலாம்.  நாட்டுக் கோழியாக வாங்கி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  சிக்கன் மற்றும் ஓட்ஸ் ஆகியவை சேர்த்து புதுவகையான ரெசிபியை தயாரித்து சாப்பிடலாம். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement