ஹைப்பர்டென்ஷனா?? இளநீர் குடிங்க!!!!

உயர் இரத்த அழுத்தம், உடல் சூடு ஆகியவற்றை குறைத்து ஆரோக்கியம் அளிக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 30, 2019 13:11 IST

Reddit
High Blood Pressure Diet: This Summer Drink May Help Manage Hypertension
Highlights
  • பல மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஆரோக்கியமான உணவு பழக்கத்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
  • இரத்த அழுத்தத்திற்கு இளநீர் மிகவும் நல்லது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் முதலில் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.  சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.  நீண்ட நாட்கள் உயர் இரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  சில உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.  நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிடும்போது உயர் இரத்த அழுத்தம் குறையும்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்காகவே இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இளநீர். கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க இளநீர் குடிக்கலாம்.  உயர் இரத்த அழுத்தம் தவிர்த்து கூந்தல், சருமம் என இவற்றின் ஆரோக்கியத்தையும் இளநீர் பராமரிக்கிறது.  மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் இளநீருக்கு முக்கிய பங்கு உண்டு.  இளநீரின் மேலும் சில நன்மைகளை பார்ப்போம். d551k34 

கலோரிகள் குறைவு:

100 மில்லி இளநீரில் 19 கலோரிகளும் இருப்பதாகவும், கொழுப்பு சத்து அறவே இல்லாத பானம் என அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொட்டாசியம் அதிகம்:

இளநீரில் பொட்டாசியம் இருப்பதால் சோடியத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்கிறது.  100 மில்லி இளநீரில் 250mg பொட்டாசியம் உள்ளது என்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு. buttermilk with coconut water
 

கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு நிறைய தொடர்புண்டு.  இளநீர் ட்ரைக்ளிசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் குறைக்க வல்லது.  இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம். இளநீரில் எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் உடலை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ளும்.  உயர் இரத்த அழுத்தம், உடல் சூடு ஆகியவற்றை குறைத்து ஆரோக்கியம் அளிக்கிறது. 

Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com