கோதுமை ரவை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா??

உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற உணவான இந்த கோதுமை ரவையில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருப்பதால் நாட்பட்ட நோய்கள் மற்றும் சரும பிரச்னைகள் ஏற்படாது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 21, 2019 13:07 IST

Reddit
Weight Loss: Different Ways Of Making Daliya To Follow A High-Protein, Low-Cal Diet
Highlights
  • கோதுமை ரவையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • கார்போஹைட்ரேட் குறைவான இந்த உணவை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
  • கோதுமை ரவை கொண்டு ருசியான ரெசிபிகளை தயாரிக்கலாம்.

கோதுமை ரவையில் உப்புமா அல்லது கஞ்சி செய்து காலை நேர உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இந்த கோதுமை ரவையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற உணவான இந்த கோதுமை ரவையில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருப்பதால் நாட்பட்ட நோய்கள் மற்றும் சரும பிரச்னைகள் ஏற்படாது.  இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவையை கொண்டு ருசியான ரெசிபிகளை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

கோதுமை பொங்கல்: 

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான சர்க்கரை பொங்கலை கோதுமை ரவை கொண்டும் தயாரிக்கலாம். கோதுமை ரவை, பச்சைப்பயிறு மற்றும் வெல்லம் சேர்த்து ருசியான இனிப்பு பொங்கலை தயாரிக்கலாம்.  bo3gfda

 

 

சாலட்:

கோதுமை ரவை, புதினா, ஆலிவ் மற்றும் வெங்காயம் சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிட்டு வரலாம்.  இதனை தயாரிப்பது மிகவும் எளிமையானது.  மிக குறைந்த நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த இந்த சாலட்டை தயாரித்து சாப்பிட்டு வரலாம்.  

கிச்சடி: 

கோதுமை ரவை, கேரட், முட்டைக்கோஸ், பாசிப்பருப்பு, பட்டானி ஆகியவை சேர்த்து ருசியான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிச்சடி தயாரிக்கலாம்.  காலை உணவிற்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி இது.  இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக உள்ளது. 

h4iupv8

 

 

ஸ்நாக்ஸ்:

கோதுமை ரவையுடன் தயிர், பாதாம், சிக்கன் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து வித்தியாசமான புளிப்பு சுவையில் ஸ்நாக்ஸ் தயாரித்து சாப்பிடலாம்.  உடல் எடை குறைக்க இந்த புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் ஏற்றதாக இருக்கும்.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement