பூரி மற்றும் பராத்தாவை தவிர்த்து வேறு என்ன சாப்பிடலாம்??

ராகியில் புரதமும் நிறைந்திருப்பதால் தசைகள் வலுவாக இருக்கும்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்க இதனை சாப்பிடலாம்.   

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 05, 2019 12:06 IST

Reddit
High-Protein Food: Ditch Your Puri And Parathas, Try This Protein-Rich Ragi Roti For Weight Loss
Highlights
  • கேரட்,வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து ராகி தோசை செய்து சாப்பிடலாம்.
  • ராகியில் புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
  • ராகியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உடல் எடை குறையும்.

மைதாவை தவிர்த்து கோதுமையில் ரொட்டி அல்லது பராத்தா செய்து சாப்பிடலாம்.  கோதுமையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.  கோதுமை தவிர்த்து ராகி, சோளம், கம்பு ஆகியவற்றிலும் ருசியான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் தாதுக்கள், கால்சியம், வைட்டமின் டி, புரதம் ஆகியவை இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்கும்.  இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை ஏற்படாது.  மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  

உடல் எடை குறைக்க: 
உடல் எடை குறைக்க ராகி மாவு பயன்படுத்தலாம்.  ராகியில் குக்கீஸ், லட்டு, சிப்ஸ் ஆகியவை செய்து சாப்பிடலாம்.  நிறைய சூப்பர் மார்கெட்களில் ராகி, கம்பு போன்றவை கொண்டு குக்கீஸ் விற்பனைக்கு வருகிறது.  ஆனால் அவற்றில் முழுமையான ஆரோக்கியம் இருக்காது.  வீட்டிலேயே ராகி மாவு கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.  அதில் கேரட், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து தோசை செய்து சாப்பிடலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

bjapigqg

 

 

ராகியில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் தாமதமாகும்.  நீண்ட நேரம் உங்களை நிறைவாக வைத்திருப்பதால் பசியுணர்வில்லாமல் இருக்க முடியும்.  இதனால் உடல் எடை குறைவதுடன் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.  ராகியில் புரதமும் நிறைந்திருப்பதால் தசைகள் வலுவாக இருக்கும்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்க இதனை சாப்பிடலாம்.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  ProteinRagi

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement