ஞாபக சக்தியை அதிகரிக்கும் பாதாம்

நீண்ட காலமாக பாதாம் ஞாபக சக்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி வருகிறது

Sarika Rana  |  Updated: June 19, 2018 16:03 IST

Reddit
Do Almonds Really Help Improve Memory?
Highlights
  • நீண்ட காலமாகவே பாதாம் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாக அறியப்பட்டுள்ளது
  • பாதாமில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடாது
நீண்ட காலமாக பாதாம் ஞாபக சக்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆல்மண்ட் மரத்தில் இருந்து கிடைக்கும் பாதாமில் முளைச் சத்துக்களை சமமாக வைத்திருக்கத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாதாமிற்கும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வைட்டமின் இ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துடன் பாதாமில் ஃபைட்டோ கெமிக்கல்ஸ், மூளையில் வீக்கத்தை குறைக்க ஆண்டி - ஆக்ஸிடன்ட்ஸ் ஆக செயல்படுகின்றது. மேலும் வயது முதிர்வால் மூளையில் ஏற்படும் மறதி பிரச்சனைகளுக்கு, பாதாமில் இருக்கும் ஒமேகா 3 - பாலி அன்சாட்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ் உதவுகிறது.
 
almonds

பாதாம் எவ்வாறு ஞாபகச் சக்தியை அதிகரிக்கிறது?மருத்துவர் ஷில்பா அரோரா அவர்கள் கூறுகையில் “பாதாம் மூளையில் உள்ள ஏ.சி.ஹெச் அசிடை கோலின் அளவை அதிகரித்து, ஞாபகச் சக்தியை மேம்படுத்தவும், அல்சைமர் முதலான நோய்களை எதிர்த்தும் செயலாற்றுகின்றன. அதிக அளவில் இல்லாமல் தினமும் 8 - 10 பாதாமை இரவு தண்ணீரில் ஊர வைத்து மறுநாள் காலை சாப்பிட்டாலே போதுமானது. ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாதாமை நீரில் ஊற வைக்கிறோம்”. ஏசிஹச் அசிடைல்கோலின் தவிர்த்து ஞாபகச் சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் தேவையான பல ஊட்டச்சத்துகக்ள் இருக்கின்றன.

almonds raw

1. வைட்டமின் பி6

பாதாமில் வைட்டமின் பி6 எனும் பைரிடாக்ஸின், புரத சத்துகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது மேலும் மூளை செல்லில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யத் தேவையான புரதத்தின் இருப்பை அதிகரிக்க உதவுகிறது.

2. ஜின்க்

தாதுப் பொருளான ஜின்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளை செல்களை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றுக்களிலிருந்து காக்க உதவுகிறது.
 
almonds belly fat

3. புரதம்

புரதம், மூளைச் செல்களை சரிசெய்து, நினைவுச் சக்தி உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தப் பயன்படுகிறது. பாதாமில் லீன் புரதம் அதிக அளவில் உள்ளது.

4. வைட்டமின் இ

வைட்டமின் இ மூளையில் நினைவாற்றலை பாதிக்கும் செல்கள், வயதாவதை குறைக்கிறது. வைட்டமின் இ அதிக அளவிலும் உட்கொள்ளாமல், தினசரி எட்டு பாதாம் என சிறிது அளவிலே எடுத்துக் கொண்டாலே பயன் தரும்.

Commentsபாதாமில் அதிக அளவில் கலோரிக்கள் இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் அளவுடன் 4 - 5 வரை எடுத்துக்கொள்வது நல்லது.
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com