உடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..!

லெமன் கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்களை இங்குக் காணலாம்.

  |  Updated: September 09, 2020 16:23 IST

Reddit
Drink This Green Tea and Lemon Concoction To Boost Immunity And Weight Loss

Green tea does not undergo any oxidation process which makes it a healthier drink to sip on.

Highlights
  • கிரீன் டீயில் அதிக எண்ணிக்கையிலான பாலிபினால்கள் உள்ளது
  • எலுமிச்சை என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • தேனில் பல ஆண்டிமைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி விட்டோம். இதற்கு முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், தொற்றுநோய்களை நம் உடல் தன்னைத் தானே துணிந்து எதிர்க்கும். 

தற்போது மழைக்காலம் வருவதால், கொரோனாவைத் தவிர மற்ற தொற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து கவனமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். 

இதற்காக தனியாக எந்த மருந்தும், புரோட்டீன் பவுடரும் எடுக்கத் தேவையில்லை. வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதில் ஒன்று தான் கிரீன் டீ. 

கிரீன் டீயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பச்சை தேயிலையில் அதிக எண்ணிக்கையிலான பாலிபினால்கள் உள்ளது. இது கேடசின்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது மற்ற தேயிலைகளை விட குறைவாக பதப்படுத்தப்படுகிறது மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யப்படவில்லை; இதனால் இது ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.


பாலிபினால்கள் ஒழுங்குமுறை டி-செல்களை (நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி) பாதிக்கின்றன, மேலும் அந்த செயல்பாட்டில், நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இருமல் மற்றும் காய்ச்சலிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. கிரீன் டீ செரிமானத்திற்கும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எலுமிச்சை மற்றும் தேனுடன் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது நல்ல சிறந்த பானமாகும். இது பருவகால நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 

எலுமிச்சை என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது.  இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைகின்றன. இதே போல், தேனில் பல ஆண்டிமைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 

an2c50mo

உடல் எடையைக் குறைக்க உதவும் கிரீன் டீ,-

தேவையான பொருட்கள்-

- கிரீன் டீ பேக்- 1

- தண்ணீர் - 1 கப்

- லெமன் - 1/2

- தேன் - 1 tsp

செய்முறை -

1. தண்ணீிரை நன்கு கொதிக்க வைத்து, அதில் கிரீன் டீ பேக்கை போடவும்.

2. அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

3. நன்கு கலக்கி, அப்படியே சுடச்சுட பருகவும். 

ஒரு நாளைக்கு 1-2 கப் வரையில் கிரீன்-லெமன் டீ பருகலாம். அதற்கு மேல் டீ குடிப்படை தவிர்ப்பது நலம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement