இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவீர்களா??

தொடர்ச்சியாக இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இரத்த அழுத்தம் குறைந்து, இருதய பிரச்சனை மற்றும் மற்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 20, 2019 14:45 IST

Reddit
Ginger Nutrition: Does Adrak Have Any Side Effects? Here's All You Need To Know
Highlights
  • இஞ்சியில் ஆயுர்வேத நன்மைகள் நிறைய உண்டு.
  • இஞ்சியை அதிகளவில் உட்கொண்டால் உடல் உபாதைகள் ஏற்படும்.
  • செரிமான பிரச்சனை மற்றும் உதிரப்போக்கு ஏற்படும் இஞ்சியை அளவாக சேர்க்கவும்.

இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  உலகளாவிய மக்கள் தங்கள் சமையலில் இஞ்சியை சேர்த்து சமைக்கிறார்கள்.  இஞ்சியில் இயற்கையாக இருக்கக்கூடிய காரத்தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  நம்மில் பலரும் மசாலா டீயில் இஞ்சி சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.  மேலும் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் தலைவலி, சளி, இருமல், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.  கூடவே சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரிசெய்யும் வல்லமை படைத்தது இஞ்சி.  

நம்மில் சிலர் டீவியில் பார்ப்பது, நண்பர்களின் ஆலோசனை, எங்கோ படித்தது என அறைகுறை புரிதலோடு இஞ்சியை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வார்கள்.  “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை போல, இஞ்சியை அதிகமாக சேர்த்து கொள்வதால் சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சியை மருத்துவரின் பரிந்துரைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.  இஞ்சியின் அதிகபடியான பயன்பாட்டினால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

o9agd3n

அதிகபடியான உதிரப்போக்கு:

இஞ்சியில் இருக்கக்கூடிய சாலிசிலேட் அமிலம், ஆண்டி-காகுலேஷன் தன்மை கொண்டது.  இஞ்சியை மாதவிடாய் காலத்தில் அதிகமாக உட்கொண்டால் கடுமையான இரத்த போக்கு ஏற்படும்.  

ஹைபோக்ளைசீமியா:

இஞ்சி மற்றும் இஞ்சி சாற்றை நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.  இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் பொருள் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது.  சிலருக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருக்கும்.  அவர்கள் மட்டும் இஞ்சியை சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும்.  rshtq6qg 

செரிமான கோளாறு:

நெஞ்செரிச்சல், வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதில் இஞ்சிக்கு நிகர் இஞ்சிதான்.  ஆனால் அதிகமாக இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டால் அவற்றின் பலன்கள் எதிர்மறையாக இருக்கும்.  தினசரி 4 அல்லது 5 கிராம் இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டால் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.  குறைந்த இரத்த அழுத்தம்:

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் இஞ்சிக்கு உண்டு.  தொடர்ச்சியாக இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இரத்த அழுத்தம் குறைந்து, இருதய பிரச்சனை மற்றும் மற்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  Listen to the latest songs, only on JioSaavn.com

மேற்கூறிய பக்கவிளைவுகளை தடுக்க, இஞ்சியை அளவாக பயன்படுத்துங்கள்.  மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களை அளவாக பயன்படுத்துவதே உடல் நலனிற்கு சிறந்தது.  Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement