காஃபி குடிப்பதால் முகப்பரு வருமா?

நமது உணவுப்பழக்க வழக்கமும் முகப்பருவிற்கு முக்கியக் காரணம்.

Natasha Chopra  |  Updated: May 30, 2018 17:24 IST

Reddit
Does Drinking Coffee Cause Acne?
Highlights
  • உணவுப்பழக்கம் முகப்பருவுக்கு முக்கிய காரணம்
  • நிறைய தண்ணீர் குடிப்பது தோலின் ஆரோக்யத்துக்கு அவசியம்
  • அதிகமாக காஃபி குடிப்பதைக் குறைப்பது அவசியம்
முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.
 
acne

நமது உணவுப்பழக்க வழக்கமும் முகப்பருவிற்கு முக்கியக் காரணம்.பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச் சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். "அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின் அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கட்டப்ப உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்யமாக வைத்திருக்க உதவும்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் Dr. ஷில்பா அரோரா ND.தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.
 
coffee

தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


தோலின் ஆரோக்யத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள் ஏற்படும். "காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்" என்கிறார் ஊட்டசத்து நிபுணர் Dr.ரூபாலி தத்தா.

எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்

Commentsபொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து. இதன் துல்லியத்தன்மைக்கு NDTV எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement