உடல் எடை குறைய இஞ்சி எலுமிச்சை டீ

உடல் எடை குறைக்க நாம் எத்தனையோ வழிகளை பின்பற்றுகிறோம்

Shubham Bhatnagar  |  Updated: December 14, 2018 19:00 IST

Reddit
Weight Loss: Drink Lemon Ginger Tea To Achieve Your Weight Loss Goals

உடல் எடை குறைக்க நாம் எத்தனையோ வழிகளை பின்பற்றுகிறோம். புத்தகங்களில் படிப்பது, கேள்விப்படுவது, நண்பர்களின் ஆலோசனை என எல்லாவற்றையும் பின்பற்றி எதுவுமே நீங்கள் எதிர்ப்பார்க்கும் பலனை தரவில்லை என்றால் இந்த சிம்பிளான குறிப்பை பின்பற்றுங்கள்.

எலுமிச்சையில் வைட்டமின் பி6, காப்பர், பொட்டாஷியம், மக்னீஷியம், சிங்க், ஃப்ளேவனாய்டு, ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்திருக்கிறது. தினமும் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். எலுமிச்சையில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க சிறந்தது.

lemon

 

அடுத்ததாக இஞ்சி. இஞ்சியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். தினமும் காலையில் இஞ்சி சாறு குடித்தால் உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்கும். உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை இஞ்சிக்கு உண்டு.

ginger powder

 

 

எலுமிச்சை இஞ்சி சாறு எப்படி தயாரிப்பது?
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, துருவிய இஞ்சி அரை கப், ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்து கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு இரவு முழுக்க ப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் சற்று இறுகி இருக்கும். இந்த கலவை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Comments

About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement