சருமம் பளபளக்க வேண்டுமா? நெல்லிக்காய் சாறு குடியுங்கள்!!

தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கலாம். 

   |  Updated: April 25, 2019 09:53 IST

Reddit
Skin Care Tips: Drink This Amla And Honey Juice Daily For Flawless Skin
Highlights
  • கோடை காலத்தில் சருமத்தில் கருமை படர்ந்துவிடும்.
  • நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் நாம் ஐஸ்கிரீம், சர்பத் குல்ஃபி ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து கொண்டிருக்கிறோம்.  இவற்றை சாப்பிட வெளியே செல்ல பயந்து நம் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜிலேயே நிறைய ஸ்டாக் வைத்திருப்போம்.  இவை ஒருபுறம் இருக்க, கோடை வெப்பம் உங்கள் சருமத்தை மிகவும் நாசம் செய்திருக்கும்  அதனை மிகவும் எளிமையாக குணப்படுத்த முடியும்.  இந்த கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதும்.  சருமம் சிறப்பாக இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தை பொருத்தவரை பெரிய நெல்லிக்காய் என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை வளர செய்யும்.  சருமத்தை ஒளிர செய்யும் தன்மை பெரிய நெல்லிக்கு உண்டு.  இதனை கொண்டு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.  பெரிய நெல்லியில் வைட்டமின் சி உள்ளதால், சருமத்தின் சோர்வை போக்கி, கொலாஜனை அதிகப்படுத்தி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது. 

Newsbeepbqit2mfதினமும் நெல்லிக்காய் சாறு குடித்து வரலாம்.  இதை தயாரிப்பது மிகவும் எளிமையானது.  நெல்லிக்காயை கொட்டை நீக்கி அரைத்து அதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.  தேன் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும பாதிப்புகளை போக்கிவிடும்.  சுருங்கங்கள், வறட்சி, சோர்வு போன்றவற்றை சரிசெய்து பிரகாசிக்க செய்யும்.  நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்தது.  நெல்லிக்காய் சாறு எடுத்து இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.  வெளிப்ரயோகத்தை காட்டிலும் இதனை அருந்துவது மிகவும் நல்லது.  நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி என பார்ப்போம். Listen to the latest songs, only on JioSaavn.com

  1. 5 முதல் 7 நெல்லிக்காயை நன்கு கழுவி வெட்டி கொள்ளவும். 
  2. மிக்ஸியில் வெட்டி வைத்த நெல்லிக்காய் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். 
  3. உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  4. அதனை வடிகட்டி கொள்ளவும்.
  5. பின், அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வரலாம்.  தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement