சருமம் பளபளப்பாக உருளைக்கிழங்கு ஜூஸ் குடிக்கலாம்!!

உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை மறையும்.  உருளைக்கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 11:36 IST

Reddit
Skin Diet: Drink This Potato Juice For Glowing And Nourished Skin
Highlights
  • உருளைக்கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
  • இதில் காப்பர், வைட்டமின் சி, மாங்கனீஸ் போன்றவை இருக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

உருளைக்கிழங்கை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.  உருளைக்கிழங்கு எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடியது.  இதில் சாலட், கிரேவி, பக்கோடா, புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.  உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை அளவாக சாப்பிடுவதே நல்லது.  இதில் பொட்டாஷியம் இருப்பதால் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.  மேலும் உருளைக்கிழங்கில் காப்பர், வைட்டமின் பி, ல்யூடின், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இருக்கிறது.  இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.  அல்கலைன் தன்மை இருப்பதால் உடலை டீடாக்ஸ் செய்யவும் பயன்படுகிறது.  இதில் ட்ரிப்டோபான் இருப்பதால் தூக்கத்தை மேம்படுத்தும்.  சரும பராமரிப்பிற்கும் உருளைக்கிழங்கு பயன்படுகிறது.  

உருளைக்கிழங்கில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது.  சருமத்திற்கு வைட்டமின் சி பல நன்மைகளை செய்யக்கூடியது.  வயது முதிர்ச்சி, சோர்வு, கருமை போன்றவற்றை நீக்கி சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.  வைட்டமின் பி6 இருப்பதால் சருமத்தில் புதிய செல்களை உருவாக்கும்.  பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளிலுள்ள அழுக்குகளை போக்குகிறது.  உருளைக்கிழங்கு சாற்றில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் இதனை குடித்து வரலாம். 

 

3srvc818
 


 

எப்படி தயாரிப்பது:

* இரண்டு அல்லது மூன்று உருளைக்கிழங்கை எடுத்து துருவி கொள்ளவும். 

* துருவி வைத்த உருளைக்கிழங்கை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதன் சாறு எடுத்து கொள்ளவும்.

* இந்த சாறு அப்படியே குடித்து வரலாம்.

* அல்லது  மிக்ஸியில் உருளைக்கிழங்கை வெட்டி போட்டு அத்துடன் கற்றாலை சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வரலாம்.  

அதேபோல உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை மறையும்.  உருளைக்கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.  Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  PotatoSkin

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement