நெல்லிக்காய் சாற்றில் இவ்வளவு நன்மைகளா??

இரண்டு மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தினமும் குடித்து வரலாம்.  இப்படி செய்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 04, 2019 18:33 IST

Reddit
Diabetes Diet: Drinking Amla Juice May Do Wonders For Diabetes Management

உடலில் மெட்டபாலிசம் சீராக இயங்கினால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகாது.  இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் சிறுநீரக செயலிழப்பு, உடல் பருமன் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவை உடலில் நீரிழிவு நோயை உண்டாக்குகிறது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உண்டு.  இயற்கை நமக்கு அருளிய மருத்துவ குணம் மிகுந்த நெல்லிக்காய் தான் நீரிழிவு நோய்க்கான தீர்வு.  

நெல்லிக்காயில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.   உடல் எடை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.  நெல்லிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

q807lmm8

 பெரிய நெல்லிக்காயில் க்ரோமியம் இருப்பதால் இன்சுலின் சுரப்பு சீராக இயங்குகிறது.  இது மெட்டபாலிசத்தையும் சரிவர இயங்க செய்கிறது.  கணையம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கி, இன்சுலின் சுரக்க செய்கிறது.  நீரிழிவு நோயாளிகள் சிட்ரஸ் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.   நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி துருவி கொள்ளவும்.  பின் அதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.  அதில் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம்.  இரண்டு மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தினமும் குடித்து வரலாம்.  இப்படி செய்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement