செரிமானத்திற்கு காபி உகந்ததா?

காபி அதிகம் குடிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, எரிச்சல், செரிமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். 

Edited by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: May 21, 2019 20:26 IST

Reddit
Drinking Coffee May Be Good For Your Digestive System. Know Why

சோர்வை போக்கும் உற்சாக பானம் என்றால் அது காபி தான்.  நம்மில் பலரும் காபி பிரியர்களாக இருப்பார்கள்.  காலை எழுந்ததில் தொடங்கி, அலுவலகம், தியேட்டர், நண்பர்கள் சந்திப்பு என எதுவாக இருந்தாலும் காபி இருந்தால் தான் அவர்களது நாளே சிறப்பாக நகர்வது போல் உணர்வார்கள்.  காபி இல்லையென்றால் அவர்களுக்கு எந்த வேலையும் ஓடாது.  ஆனால் காபியில் கஃபைன் என்னும் பொருள் இருப்பதால், அதிகபடியாக காபி குடிக்கும்போது சில உடல் உபாதைகள் ஏற்படுகிறது.  உதாரணமாக காபி அதிகம் குடிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, எரிச்சல், செரிமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காபி குடிப்பதனால் செரிமானம் சிறப்பாக இருப்பதாகவும், குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காபி குடிப்பதால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வயிறு மற்றும் குடல் பகுதிகளின் இயக்கம் சீராக இருக்கிறது.   ஆராய்ச்சியாளர்கள் இதனை சோதனை எலிகளில் நிகழ்த்தியுள்ளனர்.  இதில் எலிகளின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டதுடன், தசைகளின் இயக்கத்தையும் சீராக்கியுள்ளது.  குடல் பகுதியில் உள்ள தசைகள் பெரிதாக வளர்ந்திருப்பதும், குடல் இயக்கங்களும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

5v6npgl

 ஆக, தொடர்ச்சியாக காபி குடிப்பவர்களுக்கு வயிறு மற்றும் குடல் தசைகளின் ஆரோக்கியமும் இயக்கமும் சீராக இருக்கும்.  கஃபைன் உடலில் எப்படி செயல்படுகிறது என்பதை தாண்டி அது சில ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement