காபி குடிப்பதால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் தடுக்கப்படுமா??

காபியில் இருக்கக்கூடிய கஃபைன் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.  உங்கள் உடல் உற்சாகமாக செயல்படும். 

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: June 25, 2019 12:54 IST

Reddit
Drinking Coffee May Help Fight Diabetes And Obesity: Study

காலை எழும்போது தொடங்கி இரவு தூங்க போகும் முன் வரை நம்மில் சிலருக்கு காபி இல்லாமல் இருக்கவே முடியாது.  அதிகபடியாக காபி குடிப்பதும் ஆபத்து தான்.  காரணம் அதில் இருக்கக்கூடிய கஃபைன்.  இந்த கஃபைன் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.  இதனால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் காபி குடிப்பதால் உடலில் உள்ள “Brown fat” தூண்டப்படுகிறது.  இதன் விளைவாக நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் தடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ப்ரௌன் ஃபேட் குறிப்பாக பாலூட்டிகளுக்கும் உடலில் பிஎம்ஐ அளவு குறைவாக இருப்பவர்களுக்கும் உடலில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.   உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்து சர்க்கரை மற்றும் கொழுப்பை கரைக்க இந்த ப்ரௌன் ஃபேட் பயன்படுகிறது.  இதனால் உடல் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.  அதிகபடியான கலோரிகள் குறைக்கப்படுகிறது.  மேலும் உடலை ஆற்றலுடன் இருக்க செய்கிறது.  இந்த ப்ரௌன் ஃபேட் உடலில் கழுத்து பகுதியில் காணப்படுகிறது.  காபியில் இருக்கக்கூடிய கஃபைன் தான் நம் உடலில் இருக்கும் ப்ரௌன் ஃபேட்டை தூண்டுகிறது.  இது தூண்டப்படுவதால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறது.  காபி குடிப்பதால் ஏற்படும் மேலும் சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

ஞாபகத்திறன்: 

காபியில் இருக்கக்கூடிய கஃபைனில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.  இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து செயல் திறனை அதிகரிக்கிறது.  மூளை நரம்பியல் பிரச்சனைகளை சரிசெய்து ஞாபகத்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.  

உடல் ஆற்றல்: 

Listen to the latest songs, only on JioSaavn.com

காபியில் இருக்கக்கூடிய கஃபைன் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.  உங்கள் உடல் உற்சாகமாக செயல்படும்.  ஆனால் அளவாக குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.  Comments

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement