சாப்பிட்டு மீதமிருக்கும் சிப்ஸ் பாக்கெட்டில் காற்று புகாமல் இருக்க ஓர் அற்புதமான டிப்ஸ்!

முழு பாக்கெட்டை முடிப்பது மட்டும் முடிவல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பத்மா லட்சுமி, நீங்கள் பாதியிலேயே இருக்கும்போது சிப்ஸ் பாக்கெட்டை மீண்டும் மூடி வைக்கப் புதிரான நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

   |  Updated: April 07, 2020 22:32 IST

Reddit
Easy Hack To Seal Chips Packet By TV Host Padma Lakshmi Goes Viral

வீட்டில் இருக்கும்போதெல்லாம், நொறுக்குத் தீனி சாப்பிடுவது நமக்கு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.

வீட்டில் இருக்கும்போதெல்லாம், நொறுக்குத் தீனி சாப்பிடுவது நமக்கு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அனைத்து தின்பண்டங்களும் வைக்கப்பட்டிருக்கும் அலமாரியின் முன் நின்று, ஒரு பை சிப்ஸை எடுப்பதில் நாம் ஆர்வம் காட்டுவோம். இந்தச் செயல்பாட்டின் போது நம்மில் பெரும்பாலோர் சந்திக்கும் போராட்டம் திறந்தவுடன் சிப்ஸ் பையை மீண்டும் காற்று புகாமல் மூடி வைப்பது. சிப்ஸை திறந்து வைத்தால் பெரும்பாலும் பழையது ஆகிடும் அல்லது ஈரப்பதமாக இருக்கும். இதனால் முழு பாக்கெட்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. முழு பாக்கெட்டை முடிப்பது மட்டும் முடிவல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பத்மா லட்சுமி, நீங்கள் பாதியிலேயே இருக்கும்போது சிப்ஸ் பாக்கெட்டை மீண்டும் மூடி வைக்கப் புதிரான நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அவர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவைப் பாருங்கள்

இந்த வீடியோ வைரலாகி, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 3,00,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 85,000 ரீட்விட்களையும் பெற்றுள்ளது. சிப்ஸ் பாக்கெட்டை மீண்டும் மூடி வைக்கும் நுட்பத்தை பத்மா லட்சுமி நிரூபித்தார், இது உண்மையில் மிகவும் எளிது. அவர் முதலில் பாக்கெட்டின் மேல் மூலைகளை உள்நோக்கி மடித்து, அதை ஒரு முக்கோண மேற்புறமாக மாற்றினாள். பின்னர், பத்மா லட்சுமி தான் இப்போது மடிந்திருந்த மூலைகளை உருட்ட ஆரம்பித்தார். இது ஒரு உறை போன்ற ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கியது. பின்னர் முழு கூம்பு மேல் உருட்டப்பட்டது, இதனால் பை மீண்டும் திறக்க எந்த வாய்ப்பும் இல்லாமல் ஒரு உறுதியான நிலையை உருவாக்கியது. இதற்கு நெட்டிசன்ஸ் பதிவிட்ட ரியாக்‌ஷன்களைப் பாருங்கள்...

இந்த ஐடியா குறித்த உங்கள் கருத்தை கீழே கமெண்ட் செய்யவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement