மேங்கோ டெசர்ட் ரெசிபியை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

மாம்பழ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ரெசிபியை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 16, 2019 15:16 IST

Reddit
Raksha Bandhan 2019: Easy Mango Phool Dessert Recipe Video
Highlights
  • மாம்பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
  • இந்த டெசர்ட் ரெசிபி சுவையில் அருமையாக இருக்கும்.
  • வீட்டிலேயே செய்து சாப்பிடக்கூடிய எளிமையான ரெசிபி இது.

சிறப்பு தினங்களில் இனிப்புகள், ஐஸ்கிரீம் அல்லது கப் கேக் சாப்பிட்டு கொண்டாடுவதை உலக மக்கள் அனைவருமே வழக்கமாக கொண்டுள்ளனர்.  வழக்கமாக நாம் வீட்டில் செய்யக்கூடிய குலாப் ஜாமுன், மைசூர் பாகு, பால்கோவா போன்ற இனிப்பு ரெசிபிகளை தவிர்த்து மாம்பழம் கொண்டு எப்படி சுவையான டெசர்ட் ரெசிபியை தயாரிப்பதென்று பார்ப்போம்.  இந்த இனிப்பான ரெசிபியை எப்படி ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றுவது என்பதை பார்ப்போம்.    

மாம்பழ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான இந்த டெசர்ட் ரெசிபியில் மாம்பழ விழுது, சர்க்கரை, எலுமிச்சை சாறு, க்ரீம் சீஸ் மற்றும் வென்னிலா ஃப்ளேவர் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது.  

தேவையானவை: 

க்ரீம் சீஸ்

ஃப்ரெஷ் க்ரீம் 

சர்க்கரை

எலுமிச்சை சாறு 

எலுமிச்சை தோல் துருவல் 

மாம்பழ விழுதுசெய்முறை: 

ஒரு பௌலில் க்ரீம் சீஸ் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கொள்ளவும்.  அதில் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.  

அதில் வென்னிலா எசன்ஸ், எலுமிச்சை சாறு, எலுமிச்சை தோல் துருவல் சேர்த்து மீண்டும் நன்கு அடித்து கொள்ளவும்.  

ஒரு க்ளாஸ் டம்ளரில் அடித்து வைத்த க்ரீம் சீஸ் கலவையை சேர்த்து அதன்மேல், அரைத்து வைத்த மாம்பழ விழுதை சேர்க்கவும்.  

அதன் மேல் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து, பரிமாறவும்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement