சரும புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ!!

கண்களின் ஆரோக்கியத்திற்கு, சரும பராமரிப்பிற்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 02, 2019 16:16 IST

Reddit
Skin Health: Eat Fruits And Veggies Rich In Vitamin A To Reduce Risk Of Skin Cancer, Says Study

உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து வகையான வைட்டமின்களும் அத்தியாவசியம்தான்.  அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ உடலில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது.  கண்களின் ஆரோக்கியத்திற்கு, சரும பராமரிப்பிற்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.  மேலும் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஒருவகையான சரும புற்றுநோய் தடுக்கப்படுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

சிவப்பு அழகுடன் இருப்பவர்களுக்கு இந்த வகையான சரும புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.  பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.  குறிப்பாக ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.  இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஸ்க்வாமஸ் செல் கார்சினோமா ஏற்படாது.  அதனால் அடிக்கடி வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட்டு புற்றுநோயை அபாயத்தை தடுக்கலாம். 
 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement