உடனடி Weight loss செய்யணுமா..? - உங்களுக்கே உங்களுக்கான டிப்ஸ் இதோ!

Weight loss Tips - உங்கள் சைவ உணவுகளில் புரதத்தின் தேவை அதிகரிக்கும்போது ​​அல்லது சாலட்டில் இறைச்சிகளுடன் சேர்க்க ஒரு பார்ட்னர் தேவைப்படும்போது, ​​இந்த புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் நிச்சயமாக தேவைப்படலாம்.

  |  Updated: October 23, 2019 18:34 IST

Reddit
Eat More Of These Protein Rich Veggies For Quick Weight Loss

Weight loss Tips - பச்சை பட்டாணி பிரபலமான புரதச்சத்து நிறைந்த காய்கறியாகும், எடை இழப்பு உணவில் அவற்றை நீங்கள் சேர்க்கலாம்

Highlights
  • காய்கறிகளில் சிறந்த புரத மூலமாக Edamame உள்ளது
  • காளான்களில் புரதம் நிறைந்துள்ளது.
  • ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் கீரையும் சிறந்த புரத மூலங்களாக உள்ளது.

குழந்தைப் பருவத்தில் நம்மில் பலருக்கும் காய்கறிகள் பிடிக்காமல் இருந்திருக்கும். ஒரு சில காய்கறியை பார்த்தாலே பேயைப் பார்த்துவிட்டது போல பயமும் இருந்திருக்கலாம். அந்த சில காய்கறிகளைத் தொடக்கூட விரும்பாமல், தானாகவே அது நம் தட்டிலிருந்து மறைந்துவிடக் கூடாதா என எதிர்பாத்திருக்கலாம். ஆனால், காலப்போக்கில் சில காய்கறிகளைப் நன்றாக சாப்பிட்டு வளர்ந்திருப்பீர்கள். ஒருவேளை அவை சமைக்க எளிதானவையாகவும், எளிதில் கிடைக்கக்கூடியவையாகவும், உணவுக்கு சிறந்த துணைகளாகவும் அல்லது உங்களுக்கு நல்லது என்று நினைத்திருக்கலாம்.

இங்கு நாம் பார்க்கவிருக்கும் சில சத்து நிரம்பிய சைவ விருப்ப உணவுகள், உங்களுக்கு பெரிய நன்மையைத் தரலாம், குறிப்பாக அதிக அளவு புரதத்தை இந்த உணவுகள் வழங்குகிறது.

Also read: #MondayMotivation: These Are The Proteins You Need To Get A Flat Stomach

எனவே, எடை இழப்புக்கு ஏற்ப 8 புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1. Edamame : எடமாம் என்பது சோயா பீன்களை பிஞ்சாக இருக்கும் நிலையிலேயே அறுவடை செய்யப்பட்டதாகும். அவரைக் காயைப் பொல இருக்கும் இந்த சிறிய பச்சை காய்கறி அதிக புரதம் கொண்டது. 100 கிராம் எடமாமில் 11 கிராம் புரதம் உள்ளது. இதனால், எடமாம் மிகவும் புரதச்சத்து நிறைந்த காய்கறி என்ற பட்டியலில் எளிதாக முதலிடம் வகிக்கிறது. இதில், கூடுதலாக நல்ல அளவு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் (குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்), வைட்டமின் C, வைட்டமின் K, இறும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

2. பச்சை பட்டாணி (Green peas): மற்றொரு சிறிய காய்கறி, இதன் அளவைக் கண்டு குறைவாக எடை போடக்கூடாத ஒன்று. பச்சை பட்டாணி, இரண்டாவது மிக அதிக புரதத்தை உள்ளடக்கியதாக உள்ளது. இதன் 100 கிராமில் அளவில் 5 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் ஏ மற்றும் கே அதிகமாகவும் உள்ளன.

Also read: Beat Hunger Pangs At Work With These Protein Rich Snacks

3. காளான்கள் (Mushrooms): பூஞ்சை குடும்பத்தைச் சேர்ந்த இந்த காய்கறி, உலகம் முழுவதும் மிகவும் பிடித்த உணவாகும். இதன் ஒவ்வொரு 100 கிராமிலும் 3.1 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்ட இந்த உணவு வகை, ஏதேனும் சாப்பிட வேண்டும் என ஏங்கும் நேரத்தில், ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.

bogmvge8

100 கிராம் காளானில் 3.1 கிராம் புரதம் உள்ளது.
Photo Credit: iStock

4. காலிஃபிளவர் கீரைகள் (Cauliflower greens): காலிஃபிளவர் புரதத்தின் நல்ல மூலமாக இருந்தாலும், காலிஃபிளவர் கீரைகள் தான் உங்கள் புரத தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100 கிராம் காலிஃபிளவர் கீரையினால் 3 கிராம் புரதத்தை வழங்க முடியும்.

5. கீரை (Spinach): 100 கிராம் கீரையில் 2.9 கிராம் புரதம் உள்ளது. அதற்கும் மேலாக, கீரைகளில் அதிகளவு இறும்பு மற்றும் கால்சியம் கிடைக்கிறது.

Also read: Make These High Protein Drinks At Home To Lose Weight And Beat The Heat Too

6. ப்ரோக்கோலி (Broccoli): முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த பச்சை பூக்கும் காய்கறியில் 2.8 கிராம் புரதம் உள்ளது. அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, இந்த காய்கறியின் தண்டு மற்றும் தலை இரண்டையும் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

7. வாட்டர்கெஸ் (Watercress): வாட்டர்கெஸ் இந்த பட்டியலில் குறைவாக அறியப்பட்ட மற்றும் சற்று ஆச்சரியமான கூடுதல் தகவலாக இருக்கலாம். உறுதியான இலை கொண்ட இந்த தாவரம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் சொந்தமானது. மேலும், 100 கிராம் Watercress 2.3 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மத்தியதரைக் கடல்  (Mediterranean) உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement