முடியைப் பாதுகாக்கும் 10 சிறந்த உணவுகள்!

உணவுகளால் நம் தலைமுடியைப் பாதுகாக்கலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்! இந்த 10 சூப்பர் உணவுகள் நிச்சயம் அதற்கு உதவும்.

   |  Updated: April 01, 2019 12:22 IST

Reddit
Hair Care: Eat These 10 Foods To Revive Your Dull Locks

இன்று உலகம் முழுவதும் பொதுவானதாக தலைமுடி பிரச்னை உருவெடுத்துவிட்டது.  இதில் முடி உதிர்தல், பொடுகு, வறண்ட முடி, வலுவிழந்த முடி, வெள்ளை முடி, உடைந்த முடி என்று அடுக்கி  கொண்டே போகலாம். நம் தலை முடிக்கு நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்தே ஆகவேண்டும். காரணம் மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, நீர்சத்து குறைபாடு என்று ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இப்படியிருக்க உணவுகளால் நம் தலைமுடியைப் பாதுகாக்கலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்! இந்த 10 சூப்பர் உணவுகள் நிச்சயம் அதற்கு உதவும்.

பூசணி விதைகள் (Pumpkin Seeds)

பூசணி விதையில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது தலைமுடிக்கான செல்களைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள புரோட்டீன் பொடுகு வராமல் காக்கிறது. துத்தநாகம் இதில் மட்டுமில்லாமல் லென்டில்ஸ், எள்ளு, ஆட்டு இறைச்சி மற்றும் பச்சைப் பட்டாணியிலும் இருக்கிறது.

Newsbeep

ஆவகேடோ (Avocado)

இந்த பழத்தில் செம்பு அதிக அளவில் உள்ளதால் முடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் உதவுகிறது. ஷெல் ஃபிஷ், தானியங்கள், காய்கறிகள்,கீரைகளில் இந்த செம்பு அதிகம் உள்ளது. ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி வலிமையான முடிக்கும் , உச்சந்தலைக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.

முட்டை (Eggs)

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் முடியை வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் அடர்த்தியாக்கவும் பயன்படுகிறது. முட்டையில் உள்ள புரோட்டீன் மற்றும் பயோட்டீன் முடி வளர்ச்சிக்கு உகந்தது.

ஃபேட்டி ஃபிஷ் (Fatty Fish)

மீனில் ஒமேகா-3 ஆசிட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். சால்மன் ஃபிஷ்ஷில் வைட்டமின் D மற்றும் புரோட்டீன் இருப்பதால் முடி ஸ்ட்ராங்காக இருக்கும்.

பெர்ரீஸ் (Berries)

இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதை முடிக்கான சூப்பர் ஃபுட் என்றே அழைக்கலாம். இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் முடி பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் க்ரேன் பெர்ரிகள் நல்லது. இதில் வைட்டமின் சி,  இரும்புச்சத்து இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ (Sweet Potatoes)

ஒரு மீடியம் அளவான ஸ்வீட்  பொட்டேட்டோவில் மற்ற உணவுகளைவிட நான்கு மடங்கு அதிக வைட்டமின் A உள்ளது. கடைகளில் ஈஸியாகக் கிடைக்கும் இந்த உணவால் நிச்சயம் உங்கள் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கீரைகள் (Spinach )

ஆல்டைம் ஃபேவரைட் இந்த கீரைகள். வைட்டமின் A, c, இரும்புச்சத்து என பல நியூட்ரிஷியன்கள் இருக்கிறது. உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் தருகிறது. உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்யும். 

சோயாபீன் (Soybean)

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது இந்த சோயாபீன். குழம்பு, சைடுடிஷ், சாலட்ஸ் என அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து உங்கள் டயட்டில் சேர்த்தால் நிச்சயம் நல்ல பலனைத் தரும்..

செம்பு தண்ணீர் (Copper Water)

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் செம்பு, பித்தளை, சில்வர் பாத்திரத்தில்தான் தண்ணீர் உற்றி வைத்துக் குடித்து வந்தார்கள். அவர்களின் வலிமையான உடலுக்கு அது ஒரு மிகப்பெரிய காரணம். சமீபத்திய ஆய்வில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதாகத் தெரிய வருகிறது. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும்  உதவுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

இறைச்சி (Meat)

இறைச்சியில் முடி வளர்வதற்கான புரோட்டீன்கள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக ரெட் மீட்டில் இருக்கும் இரும்புச்சத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வாரத்தில் 3-4 நான்கு முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement