இரத்த சோகையை போக்கும் 5 உணவுகள்!!

கீரைகள், சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, இறைச்சி, கோழி, நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். 

Edited by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: September 17, 2019 13:30 IST

Reddit
Anaemia May Contribute To The Spread Of Dengue: Eat These 5 Foods To Combat Anaemia

மழைக்காலம் வந்தவிட்டாலே போது, டெங்கு, மலேரியா போன்ற உடல் உபாதைகள் போன்றவை ஏற்படும்.  கொசுக்களால் ஏற்படும் இதுபோன்ற நோய் தொற்றுகளால் வருடாவருடம் பல லட்சம்பேர் பாதிக்கப்படுகின்றனர்.  இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவை குணமாக நிறைய வாய்ப்பிருக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது உடலில் மிக எளிதில் நோய் தொற்று அபாயம் ஏற்படும்.  ஆரோக்கியமான உடல் இருப்பவர்களுக்கும்கூட இரத்த சோகை ஏற்படக்கூடும். இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும்போது கொசுக்களால் உண்டாகும் கிருமி தொற்று தடுக்கப்படுகிறது.  இதனை பரிசோதிக்கும் வகையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுடைய இரத்தமும், ஆரோக்கியமாக இருப்பவர்களின் இரத்தமும் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.  இதில் இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பவர்களுக்கு டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிய வந்தது.  தொடர்ச்சியாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சோகை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம்.  இரத்த சோகையை போக்கும் உணவுகள் சிலவற்றை பார்ப்போம். கீரைகள், சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, இறைச்சி, கோழி, நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com