சூரிய கதிர்களின் பாதிப்பிலிருந்து தப்ப இந்த பழங்களை சாப்பிடலாம்!!!

புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க சில பழங்களை நீங்கள் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும்.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 23, 2019 07:02 IST

Reddit
Eat These Fruits This Summer To Protect Your Skin From Sun Damage, Naturally
Highlights
  • புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்கும்.
  • சூரிய கதிரில் இருந்து சருமத்தை பாதிக்கும் சில உணவுகளும் உண்டு.
  • சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இதன் விளைவாக சரும பாதிப்புகளும் அதிகரித்துவிட்டன.  சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் நம் சருமத்தில் படுவதால் சிலருக்கு புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.  சிலர் வெறும் சன்ஸ்க்ரீன் உபயோகிப்பதால் மட்டுமே போதுமானது என்று நினைத்து கொள்கிறார்கள்.  சன்ஸ்க்ரீன் உபயோகித்தால் சருமம் கருத்து போகாமல் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். பின்பு ஏன் வெளியே சென்று வந்ததும் சருமத்தில் கருமை படர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா? சுருக்கம், பருக்கள், தேமல் மற்றும் கருமை இல்லாத சருமம்தான் எல்லோரது விருப்பமும்.  அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியமானது.  புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க சில பழங்களை நீங்கள் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும்.  

தர்பூசணி:

தர்பூசணியில் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.  

b96m2t28

அவகாடோ:

அவகாடோவில் வைட்டமின் ஈ உள்ளதால், உடலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன், சரும பாதிப்பில் இருந்து காக்கவும் செய்கிறது.  

i35vhb78

மாதுளை:

மாதுளையில் எண்ணற்ற நற்பலன்கள் உள்ளது.  இதில் அந்தோசையானின்ஸ், டான்னின்ஸ் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் உண்டு.  சுரிய கதிர்களால் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.  

a8g0c7lg

ப்ளூபெர்ரீஸ்:

ப்ளூபெர்ரீஸில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் அதிகபடியான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சரும பாதிப்புகளை போக்கி சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

5t1p2sjo

ஆரஞ்சு:

சிட்ரஸ் பழங்கள் அனைத்துமே சருமத்திற்கு நன்மை பயக்கக்கூடியது தான்.  குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, ஈ, லிமோனின் போன்றவை அடங்கியிருக்கிறது.  இவை சருமத்தில் உள்ள செல்களை புதுபிக்க செய்யும்.  

Comments

akik33to


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement