சைவ பிரியர்களுக்கான கீடோ டயட் உணவுகள்!!

உடல் அதன் ஆற்றலுக்காக கொழுப்புகளை எரித்து கொள்வதன் மூலம் உடல் எடை குறையும். 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 31, 2019 18:55 IST

Reddit
Keto Diet For Vegetarians: Eat These Nutritious Vegan Foods For Weight Loss
Highlights
  • விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடலாம்.
  • டோஃபூவில் இறைச்சிக்கு நிகரான புரதம் இருக்கிறது.
  • அவகாடோவில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து இருக்கிறது.

உடல் எடை குறைக்க வெவ்வேறு வகையான டயட்களை பலரும் பின்பற்றி வருகிறார்கள்.  அதில் முக்கியமானது கீடோ டயட்.  கார்போஹைட்ரேட்டை குறைத்துவிட்டு கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதே கீடோ டயட்.  உடல் அதன் ஆற்றலுக்காக கொழுப்புகளை எரித்து கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.  உடல் எடை விரைவில் குறைய சில கீடோ உணவு பட்டியல் உங்களுக்காக….விதைகள் மற்றும் கொட்டைகள்:

பாதாம், வால்நட், ஆளிவிதை, பூசணி விதை போன்றவற்றில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருக்கிறது.  

a7qp9p4o

 

டோஃபு:

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபு புரதம் நிறைந்தது.  இதில் மிக குறைந்த அளவே கார்போஹைட்ரேட் உள்ளது.  சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக இதனை சாப்பிடலாம்.  

a39400r

 அவகாடோ:

அவகாடோவில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கிறது.  ஒரு அவகாடோவில் 2 கிராம் கார்போஹைட்ரேட் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. 62gsr118

 

கீரைகள்:

ப்ரோக்கோலி, கீரைகள், காலிஃப்ளவர், லீட்யூஸ் போன்றவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் கொஞ்சமும் இல்லை.  நாட்பட்ட நோய்களை குணப்படுத்தவும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இவற்றை சாப்பிடலாம். 

green vegetables

 தேங்காய் எண்ணெய்:

Listen to the latest songs, only on JioSaavn.com

உடல் எடை குறைக்க தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்.  இளநீர், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் க்ரீம் ஆகியவை சிறந்த கீடோ உணவுகள்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement