ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த சாலட்களை சாப்பிடுங்கள்!!

மார்க்கெட்களில் கிடைக்கும் சாலட்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவு.  அவை பதப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்பதால் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 17, 2019 08:50 IST

Reddit
Weight Loss: Eat This Fibre And Antioxidant-Rich Salad To Shed Kilos
Highlights
  • சாலட்களில் கலோரிகள் மிகவும் குறைவு.
  • சாலட்களில் உங்களுக்கு பிடித்த ட்ரெஸ்ஸிங் சேர்த்து சாப்பிடலாம்.
  • ப்ரோக்கோலியில் ஆண்டிஅக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.

 உடல் எடை குறைப்பதற்கு அற்பணிப்பும், மன கட்டுப்பாடும் மிகவும் அவசியம்.  கலோரிகள் குறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதென்பது கடினமான ஒன்றுதான்.  அப்படி தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது நிச்சயம் உடல் எடை குறைவதை உணர முடியும்.  உடல் எடை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலே போதும்.  காய்கறி சாலட்களை நிறைய சாப்பிடலாம்.  குறிப்பாக ப்ரோக்கோலி.  ப்ரோக்கோலி, மிளகு, ஒயிட் வினிகர் சேர்த்து செய்யப்படும் சாலட்டை சாப்பிட உடல் எடை குறையும்.  காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ இதனை சாப்பிடலாம்.  t8sb0m08

 

ப்ரோக்கோலி, கேரட், குடைமிளகாய் போன்றவற்றில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.  நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க செய்யும்.  மலச்சிக்கலை தவிர்க்கும்.  மெட்டபாலிசத்தை விரைவாக்கி உடல் எடை குறைய செய்யும்.  இந்த சாலட்டை செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.  

மார்க்கெட்களில் கிடைக்கும் சாலட்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவு.  அவை பதப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்பதால் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.  
 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement