இரத்த சர்க்கரையை சீராக்கும் பாகற்காய்!!

கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 30, 2019 18:22 IST

Reddit
Diabetes Diet: Karela (Bitter Gourd) Meal To Manage Blood Sugar Levels
Highlights
  • கசப்பு சுவையால் பாகற்காயை யாரும் விரும்ப மாட்டார்கள்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நல்லது.
  • அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாகற்காயை விரும்பி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லை.  பாகற்காயில் கசப்பு சுவை மிகுதியாக இருக்கிறது.  இந்த கசப்பு சுவை உடலுக்கு மிகவும் நல்லது.  இவை குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.  குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நல்லது.  இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.  மேலும் உடல் எடை குறைக்கவும் பாகற்காய் சாப்பிடலாம்.  100 கிராம் பாகற்காயில் 602 கிராம் பொட்டாஷியம், 7 கிராம் கார்போஹைட்ரேட், 3.6 கிராம் புரதம் ஆகியவை நிறைந்திருக்கிறது.  அத்துடன் 34 கலோரிகள் இருக்கிறது. 

bitter gourd tea

 பாகற்காயில் பாலிபெப்டிக் –பி இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கிறது.  இதில் கொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க உகந்தது. பாகற்காயில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.  மேலும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  பாகற்காயை சரியான பதத்தில் சமைத்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.  பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  இதில் ஒமேகா 6 மற்றும் 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.  கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement