கீடோ டயட்டில் இருப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!!

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் காலை உணவிற்கு சிறந்தது. ​

  |  Updated: April 22, 2019 15:13 IST

Reddit
Weight Loss: Eat This Special Egg Breakfast Meal If You Are On Keto Diet 
Highlights
  • காலை உணவிற்கு முட்டை சாப்பிடலாம் என கீடோ டயட் பரிந்துரைக்கிறது.
  • முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
  • இந்த ரெசிபியில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இருக்கிறது.

தினசரி வெண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டும் உடல் எடை குறைகிறது என்றால் நம்ப முடிகிறதா?  குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிகளவு கொழுப்பு மற்றும் கீடோ டயட்டை பின்பற்றினால் உடல் எடை விரைவில் குறையும்.  புரதம் நிறைந்த முட்டையை உணவில் சேர்த்து கொள்வதால் செரிமானம் எளிமையாகிறது.  உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டுமே சாப்பிடுவார்கள்.  கீடோ டயட்டில் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிட வேண்டும். முட்டையின் வெள்ளை கருவில் புரதமும், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12, ஃபோலேட் மற்றும் கோலின் ஆகியவை இருக்கிறது.  இவை உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.  கார்போஹைட்ரேட் குறைவாகவும் கொழுப்பு சத்து அதிகமாகவும் இருக்கும் இதுதான் சிறந்த கீடோ டயட் உணவாக இருக்கிறது.  காலை நேர உணவிற்கு முட்டை சிறந்தது.  ஆம்லெட், ஃப்ரென்ச் டோஸ்ட், ஸ்க்ரம்பில்டு மற்றும் போச்டு எக் ஆகியவற்றை சாப்பிடலாம்.  இதில் புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஸ்டெப் 1 -  நான்கு முட்டையை மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஸ்டெப் 2 - முட்டை நன்கு வெந்தபின் அதனை குளிர்ந்த நீரில் எடுத்து வைக்கவும். ஸ்டெப் 3 - முட்டை குளிர்ந்த பிறகு ஓட்டை உடைத்து பிரித்து தனியே வைக்கவும்.ஸ்டெப் 4 - முட்டை நன்கு மசித்து அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். ஸ்டெப் 5 - இந்த கலவையை அவகாடோ மற்றும் ஸ்மோக்டு சால்மன் ஆகியவற்றுடன் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com5dd13shg

 உங்களுக்கு இறைச்சி பிடிக்கவில்லை என்றால் மீன் சேர்ப்பதற்கு பதிலாக ஃப்ரைடு சேர்த்து கொள்ளலாம்.  இத்துடன் செலரி அல்லது கொத்தமல்லி இலைகளை சேர்த்து சாப்பிடலாம்.  இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் காலை உணவிற்கு சிறந்தது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement