முட்டை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்குமா?

இருதய நோய் உள்ளவர்களும் அளவாக தினசரி முட்டை சாப்பிடலாம்.  

Edited by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: May 21, 2019 21:29 IST

Reddit
Eating Eggs Does Not Have An Adverse Effect On Heart Health, Says Study

உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் சேர்ந்தால் இருதய ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.  இருதயத்திற்கு செல்லும் தமணிகளில் கொலஸ்ட்ரால் தேங்குவதால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது.  இந்த கொலஸ்ட்ராலால் இருதயத்திற்கு இரத்த ஓட்டம் சீரற்று இருப்பதோடு அடைப்பும் ஏற்படுகிறது.  இதனால் இதய துடிப்பும் பாதிக்கப்படுகிறது.  இதன் காரணமாகதான் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  அந்த உணவு பட்டியலில் முதலில் இருப்பது முட்டை.  முட்டையில் மஞ்சள் பகுதியில் தான் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது.  இதய நோயாளிகள் முட்டையை அரவே தவிர்க்க வேண்டும் அல்லது வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் ஆலோசனைதான்.  ஆனால், முட்டையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்கும்.  

j5bch54

 

இருதய பாதிப்பு உள்ளவர்கள் முட்டையை முழுமையாக தவிர்க்க வேண்டுமா?

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தினமும் முட்டை சாப்பிடுவதால் அல்லது கொலஸ்ட்ரால் நிறைந்த உணவை சாப்பிடுவதால் இருதய நோய்களின் அபாயம் குறைவு என்றே தெரிவிக்கின்றனர்.  மரபு சார்ந்த நோய்கள் இருந்தால் மட்டுமே மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் வரக்கூடும்.  1950 ஆம் 42 வயது முதல் 60 வயது வரையுள்ள ஆண்களுக்கு இருதய நோய்கள் ஏதுமின்றி, அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அதேபோல், 1984-1989 ஆண்டுகளில் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், அதன் பிறகு இந்த 21 ஆண்டுகளில் 217 ஆண்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  தவறான உணவு பழக்கங்களும், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளாலும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  ஆனால் குறிப்பாக முட்டையால் மட்டுமே எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒரு முட்டையில் 200 mg கொலஸ்ட்ரால் இருக்கிறது.  இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் 520 கிராம் கொலஸ்ட்ராலை தினசரி எடுத்து வந்தனர்.  இருந்தபோதும், இருதய நோய்களால் பெரிதும் பாதிப்படையாமல் இருந்துள்ளனர்.  ஆகவே, இருதய நோய் உள்ளவர்களும் அளவாக தினசரி முட்டை சாப்பிடலாம்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com